’தேவி 2’ விமர்சனம்

  

பிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,குரு சோமசுந்தரம்,தர்ஷன் ஜாரிவாலா,திம்பிள் ஹயதி,அரவிந்த் ஆகாஷ்,அர்ஜாய்,யோகி பாபு,சோனு சூட், நடித்துள்ளனர்.
த்ரில்லர் கதையை மையப்படுத்தி தேவி 2 படம் உருவாகியுள்ளது.

தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணியில் உருவான தேவி 2 படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நந்திதா சுவேதா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, குரு சோமசுந்தரம், தர்ஷன் ஜாரிவாலா, திம்பிள் ஹயதி, அரவிந்த் ஆகாஷ், அர்ஜாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் தமன்னா மட்டும் பேயாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் தமன்னா மற்றும் பிரபு தேவா ஆகிய இருவருமே பேயாக நடித்துள்ளனர்.
படத்தில் கோவை சரளா கூறுவது போல், ஒன்னுல்ல, இரண்டு பேய்.

சரி படத்தின் கதை என்ன? தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள்.

வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு.

பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பிப் போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்.

இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால் உயிருக்கு ஆபத்து. இதற்கிடையில் சில அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன.

பிரபு தேவாவுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. அதே வேளையில் தமன்னா அந்த இருவரிடமிருந்து தன்னை தன் கணவரையும் பாதுக்காக்கப் போராடுகிறார்.

யார் அந்த இரண்டு பெண்கள், அவர்களின் பின்னணி என்ன, பிரபு தேவாவுக்கு அந்த பெண்களுக்கும் என்ன தொடர்பு, ஆபத்தில் இருந்து அவர் தப்பித்தாரா, தமன்னா ஆட்டிப்படைத்த அமானுஷ்யம் என்ன என்பதே கதை.

முதல் பாகத்தை கொஞ்சம் மனதில் நினைவுபடுத்தித்தான் தேவி 2 க்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் தேவி 1 படத்தில் நம்மை குஷியாக்கினார். தற்போது தேவி 2 படத்தில் கூடுதலாக .வழக்கமான கதையாக தான் இருக்கும் என நினைத்தவர்களுக்கு எதிர்பாராத சர்ப்பிரைஸ் வைத்திருக்கிறார்.

பிரபுதேவாவை இந்த வயதில் அதே இளமை துள்ளலோடு இருக்கிறாரே என அவரை பார்க்கும் தோன்றலாம். 2 ரூபங்களில் கலக்கியிருக்கிறார். இரண்டிற்கும் கூலாக சேஞ்ச் ஓவர் காட்டியிருப்பது ஆச்சர்யம். நடனம் சொல்லவே வேண்டாம்.

தமன்னா பார்ட் 1 ல் நாயகியாகக் கலக்கினார். தற்போது தேவி 2 குடும்பத்து பெண்ணாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேயிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு அடடா.

கோவை சரளாவுக்கு பேயை டீல் பண்ணுவதில்  முக்கிய பங்கு உண்டு. அலட்டல் இல்லாத பாடல், போதுமான பின்னணி இசை என படம் எங்கேயும் சலிப்பு வராமல் கொண்டு போகிறது.

மொத்தத்தில் தேவி 2 கோடை விடுமுறையில் நல்ல பொழுதுபோக்குப்படம்.