நடிகர்கள் பெயரில் மோசடி: நடிகர் சங்கம் அறிக்கை!

ns11நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை :

வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 22 உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தின் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள். நடிகர் சங்கத்தின் முன்னால் வந்து நின்று கோஷமிட்டார்கள். அவர்களிடம் பொய்யான கையெழுத்து வாங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாராகி தொடர்ந்துள்ளார். அதை அறிந்த அவர்கள் நாங்கள் இதை செய்யவில்லை, எங்களிடம் அவர்கள் தவறாக கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நாங்கள் நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் எதிராக அவர்களுடைய தூண்டுதலின்பேரில் தான் சத்தம் போட்டோம். நாங்கள் நிர்வாகிகள் மீதோ அல்லது நிர்வாகத்தின்மீது எந்தவித வழக்கும் கொடுக்கவில்லை, ஆகவே தங்களை மன்னித்து திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் கடிதத்தை அவர்கள் கொடுத்தனர்.

அது குறித்து இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வாராகி அவர்கள் தூண்டுதலால் தொடரப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு அம்பிகா, ஜெயந்தி, மல்லிகா, மலர்கொடி, தேவி, உஷா, சந்தியா, ராஜாமணி.