நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு திருமணம் : நடிகையை மணக்கிறார்!

 தாரை தப்பட்டை படத்தில் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஆர்.கே சுரேஷ் .இயக்குநர் பாலாவின் அறிமுகங்கள் என்றும் சோடை போனதில்லை. அப்படி ஓர் அழுத்தமான அடையாளமாக  பதிந்துள்ளவர் அவர்.

இப்போது சுரேஷ் கையில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள். தனி நாயகனாக தனிமுக ம்  பில்லா பாண்டி , வேட்டை நாய் போன்ற படங்களில் நடிக்கிறார் . ஹர ஹர மகாதேவி , ஸ்கெட்ச் . இப்படை வெல்லும்  , முகம் , பள்ளிப் பருவத்திலே போன்றவற்றில் பாசிடிவ் நெகடிவ் வில்லன் குணச்சித்திரம் என்று கலந்து கலக்குகிறார்.

ஆர்.கே.சுரேஷ் பற்றி இனிப்பான செய்தி ஒன்று. தாரை தப்பட்டை வில்லனுக்கு      டும் டும் டும்.

ஆம் .. விரைவில் அவருக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது .காரைக்குடியைச் சேர்ந்த  பெண்ணை மணக்கவுள்ளார். திருமண செய்தி சொல்லும்நோக்கில் இன்று ஊடகங்களைச்சந்தித்து  தன் வருங்கால மனைவியை  ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் ஒரு டிவி நடிகை ‘சுமங்கலி’ தொடரில் நாயகியாக நடிக்கும்  நடிகை திவ்யாதான் ஆர்.கே.சுரேஷ் கைப்பிடிக்கப்போகும் இல்லறத்துணை என்பது குறிப்பிடத் தக்கது.