நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர்!

cm-meetதென்னிந்திய திரைப்பட
நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் தலைமை செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து ,
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும்
மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1௦
லட்சத்து 25ஆயிரம் ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் .விஷால் ,
துணை தலைவர்கள்  பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் ஆகியோர்
உடனிருந்தனர்.

 

நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர் , துணை தலைவர்கள்
பொன்வண்ணன் , கருணாஸ் பேசியபோது , ”முதல்வர் அவர்களை நாங்கள் சந்தித்து பேசும் போது ஒரு கோரிக்கை வைத்தோம்
அது யாதெனில் , பொதுவாக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் அது சட்டமன்ற
தேர்தலாக இருந்தாலும் , பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்த
காலகட்டத்தில் வெளியூரில் இருக்கும் நடிகர் நடிகர்கள் தங்கள் ஊரை விட்டு
வெளியூர்களுக்கு சென்று நாடகம் நடிப்பது , மற்றும் நாடகம் அமைப்பது
தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட 3மாத
காலகட்டம் அவர்கள் வாழ்வாதாரம் சுத்தமாக பாதிக்கப்படுகிறது. பொதுவாகவே
நாடகம் என்றால் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் தான் வரவேற்ப்பு
இருக்கும். ஆறு மாத காலம் அவர்களுக்கு வேலை இருக்கும் அதன் பின்பு
தொடர்ச்சியாக ஒரு ஆறு மாத காலத்துக்கு வேலை இருக்காது. அந்த ஆறு
மாதம் முடிவடைந்து வேலை வரும் இந்த நேரத்தில் அவர்களுக்கு தேர்தலினால்
தடை வந்தால் ஒரு வருட காலம் அவர்களுக்கு வேலை இல்லாமல் போகும் சூழ்நிலை
உண்டாகிவிடுகிறது. நாங்கள் இது சார்பாக தமிழக முதல்வரிடம்  இந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் அவர்கள் நாடகம் போடுவதற்கு
நீங்கள் அனுமதி தரவேண்டும் என்று கோரினோம். அதற்கு அவர்கள் எங்களிடம் ,
“ தமிழக அரசு எப்போதுமே அப்படி ஒரு விஷயத்தை செய்தது இல்லை , என்றுமே
தமிழக அரசு நாடக நடிகர்களுக்கு உதவியாக தான் இருந்துள்ளது , அது போல்
இருந்தால் தமிழக அரசு தலையிட்டு கண்டிப்பாக நாடக நடிகர்களுக்கு உதவி
செய்யும். அதே போல் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு அது
நடைபெறுகிறது என்றால் அந்த காலகட்டத்தில் நீங்கள் இதை ஒரு கோரிக்கையாக
வைத்தால் இது சரியாக இருக்கும் என்றார்கள். இது தேர்தல் ஆணையம் சார்ந்த
உத்தரவாக இருப்பின் தேர்தல் ஆணையத்திடம் தான் இது சார்ந்த கோரிக்கையை
வைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களிடம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பூஜையினுடைய
துவக்க விழாவிற்கு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் வரவேண்டும் என்று
நாங்கள் சென்ற முறை சந்தித்த போதே கோரிக்கை வைத்திருந்தோம் , அதே
கோரிக்கையை இந்த முறையும் தலைவரும் , பொது செயலாளரும் வைத்தனர்.
முதலமைச்சர் நிச்சயமாக ஒரு தேதியில் வந்து கலந்து கொள்கிறேன் என்று
கூறியுள்ளார் , அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது ‘யஎன்றனர்
நடிகர் சங்க நிர்வாகிகள்.​
​,​