நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் முன் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்”
படத்தின் முன் வெளியீட்டு விழா!

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு
விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

லைகா சார்பில் தமிழ் குமரன் கூறியதாவது…

“எங்களுக்கு ஆதரவாக இருந்ததற்கு சிவகார்த்திகேயனுக்கும், கலை அரசுக்கும் நன்றி. எனது திறமையை வெளிக்கொண்டு வர இடம் கொடுத்த சுபாஷ் அண்ணனுக்கு நன்றி. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்ததது, ‘டான்’ படமும் அந்த சாதனையை நிகழ்த்தும். அனிருத் அனைவரையும் கவரும் படியான பாடல்களை வழங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக வெற்றிகரமான நடிகை பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் சிபி ஒரு கடின உழைப்பாளி, மேலும் அவர் இந்த படம் சிறப்பாக வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். இந்த படத்திற்கு முழு ஆதரவையும் வழங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி” என்றார்.

கதிர், இணை தயாரிப்பாளர், பேசியது….

“இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே, சிவகார்த்திகேயன் என்னிடம், நாம் லைகாவுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம், அவர்களுக்கு நல்ல லாபத்தைத் தர வேண்டும் என்று கூறினார். டான் மூலம் அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே லாபம் கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் படத்தின் வெளியீட்டை சிறப்பாக மாற்றிய உதயநிதி ஸ்டாலின் சார் மற்றும் அவரது நிறுவன குழுவினருக்கு நன்றி. டான் அனைவருக்குமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனை டாக்டராகப் பார்த்தீர்கள், டான் திரைப்படத்தில் பி.இ., பேச்சுலர் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் – ஆக பார்ப்பீர்கள்” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், பேசியபோது..

“ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது. ரீ-ரிக்கார்டிங் செய்யவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். டாக்டரை விட இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தைக் கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளிப் பகுதி இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லைகா தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்

கலை இயக்குநர் உதய்குமார் பேசியது…
“லைகா, சிவகார்த்திகேயன் சார், கலை சார், இயக்குநர் சிபி ஆகியோர்தான் இந்த படத்தின் கலைப் பணிகள் மிக அழகாக அமைந்ததற்கான காரணம். இந்தப் படத்தை அனைவரும் முழுமையாக ரசிப்பார்கள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் KM பாஸ்கரன் பேசியது…

“டான் திரைப்படம் மிக அட்டகாசமான படம், மற்றும் எனக்கு நெருக்கமான ஒரு படம். சிவா சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஹீரோ’ படத்தின் பேட்ச் அப் பணியின் போது, இருவரும் விரைவில் இணைந்து மீண்டும் பணியாற்றுவோம் என்று கூறிய அவர், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். இயக்குநர் சிபியின் பார்வையும், அர்ப்பணிப்பும் அசாதாரணமானது. அவர் கதையை விவரித்த விதமும், காட்சிப்படுத்திய விதமும் மிக அருமை. எஸ்.ஜே.சூர்யா சாரை படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவு செய்தது மிகப்பெரிய அனுபவம். இந்தப் படத்தில் 5 இயக்குநர்களைப் படம் பிடித்தது, இந்தப் படத்தின் பெரிய சிறப்பம்சமாகும். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தைத் திறம்பட செயல்படுத்துவதில் கலை சார் ஒரு தூணாக இருந்துள்ளார் ” என்றார்.

படதொகுப்பாளர் நாகூரான் பேசிய போது…

“இது எனது நண்பன் சிபி உடைய படம். 10 ஆண்டுகளுக்கு முன், சிபியின் முதல் படத்திற்கு நான் எடிட்டராக பணியாற்ற வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்
” என்றார்.
நடன இயக்குநர் ஷோபி பேசியது…

“சிபி ஆரம்பத்தில் பாடலைப் பற்றி என்னிடம் கூறியபோது, ஜலபுலஜங்கு பாடல் ஒரு பெரிய ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார். நான் சரி என்ற முடிவில் இருந்தேன், ஆனால் முதலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். அனிருத் ஒரு பிரமாதமான பாடலை அமைத்திருந்தார், பின்னர், அதனைச் சரியாக உருவாக்குவது எனது வேலையாக இருந்தது. பாடலின் படப்பிடிப்பு நேரம் வந்தபோது, சிவகார்த்திகேயன் உடல்நலக்குறைவில் இருந்தபோதிலும் பாடலில் நம்பமுடியாத முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பாடலைப் படமாக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன, இருந்தாலும் திரையரங்குகளில் பார்வையாளர்களால் கொண்டாடப்படும் ஒரு மகத்தான வேலையை சிவகார்த்திகேயன் செய்துள்ளார். பாடலை கண்டிப்பாக ரசிப்பீர்கள்
” என்றார்.

நடன இயக்குநர் பாபி கூறியதாவது…

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபிக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன், படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா சார், சமுத்திரக்கனி சார் ஆகியோருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.கே.யின் அடுத்த படத்தில் நடனம் அமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகை மற்றும் பாடகி சிவாங்கி பேசிய போது…

“இந்தப் படத்தில் நான் நடிக்க முதல் காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நான் எப்போதும் சிபி சாரை பல கேள்விகள் கேட்டு, தொந்தரவு செய்திருக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தார். கலை சார் உடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாக இருந்தது, படப்பிடிப்பு முழுவதும் அவர் மிகவும் கூலாக இருந்தார். எஸ்.ஜே.சூர்யா சார், இவ்வளவு பெரிய கலைஞன், அவர் இவ்வளவு பணிவான மனிதராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் எனக்கு நிறைய கதைகளைக் கூறினார். சமுத்திரக்கனி சார் அவரது கேரக்டரை முழுமையாக உள்வாங்கி படப்பிடிப்பிற்கு வந்தார். எஸ்.கே.அண்ணா அவ்வளவு இனிமையான மனிதர். அவ்வளவு பெரிய நடிகரான போதிலும், அவர் இன்னும் பணிவாகவும், செட்டில் அனைவரையும் சமமாகவும் நடத்துகிறார். பிரியங்கா படபிடிப்புத் தளத்தில் மிகவும் அழகாக இருந்தார், படப்பிடிப்பில் அவர் என்னிடம் நன்றாகப் பழகினார். நான் சில தவறுகளைச் செய்த போது, முழு தொழில்நுட்பக் குழுவும் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தது. அனிருத் சார் இசையமைக்கும் இந்த படத்தில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது
” என்றார்.

நடிகர் பால சரவணன் பேசியது…

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி சக்கரவர்த்திக்கு நன்றி. நாங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைலட் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாய் இருந்து வருகிறோம். நான் அயலான் படத்தில் பணிபுரிந்தபோது, படத்தில் எனக்கு மிகக் குறைவான காட்சிகளே இருந்தன. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணன் வேற ப்ராஜெக்ட் இருக்கு, அதில் என் ரோல் அதிகமா இருக்கும்னு சொன்னார். இந்தப் படத்தில் என்னையும் ஒரு அங்கமாக ஆக்கியதன் மூலம் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படபிடிப்பு நேரத்தில் அவர் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது, இப்போதும் கூட அவர் காட்டும் அன்பு தனித்துவமானது. நான் எஸ்.ஜே.சூர்யா சாரின் தீவிர ரசிகன். படப்பிடிப்பின் போது, செட்டில் அவரது நடிப்பைப் பார்த்து எங்களது வசனங்களை மறந்துவிடுவோம். சமுத்திரக்கனி சார் ஒரு சகோதரனைப் போன்றவர், தவறு செய்யும் போது உரிமை எடுத்து நம்மைக் கண்டிப்பார், நல்லது செய்தால் பாராட்டுவார். ஆரம்ப நாட்களில் பிரியங்கா சாதுவாகத் தெரிந்தார், ஆனால் பின்னர், அவரது நகைச்சுவையால் எங்களை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். டான் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்
” என்றார்.

நடிகர் RJ விஜய் கூறிய போது…

“எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் இருக்கும் உணர்வைப் போன்ற அனுபவத்தை எங்களுக்கு வழங்கினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி அண்ணனுக்கு நன்றி. டான் படத்தில் பணிபுரிவது இரண்டு வகுப்புகளில் கலந்துகொள்வதைப் போன்றது, ஒன்று பிராக்டிகல் மற்றொன்று தியரி. ஒன்று சிவா அண்ணா, சமுத்திரக்கனி சார், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிற கலைஞர்களுடன் பணிபுரிந்தது. பின்னர் கேமரா ஆஃப் ஆனதும், அது ஒரு தியரி வகுப்பாக இருக்கும், ஏனெனில் அனைவரும் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்
” என்றார்.

பிக்பாஸ் புகழ் ராஜு கூறியதாவது…

“இந்தப் படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், ஆனால் சிவகார்த்திகேயன் அண்ணன் இந்த விழாவிற்கு என்னை அழைத்து கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் முன்னணி நடிகர்களை நான் நீண்ட நாட்களுக்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சமுத்திரக்கனி சாரை ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது சந்தித்தேன், ஹீரோவாக வருவதற்கு என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிவகார்த்திகேயன் ஒரு உண்மையான டான், அவர் தனக்கென ஒரு தனித்துவமான சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். பிரியங்கா ஒரே இரவில் திடிரென வந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கைப்பற்றிவிட்டார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் போது, நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவோம். சிபி தனது கல்லூரி அனுபவத்தை வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி
” என்றார்.

பிக்பாஸ் புகழ் நடிகர் ஷாரிக் கூறியதாவது…

”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முதலில் நான் தான் சிபியிடம் கேட்டேன். உண்மையில், படத்தில் 2 நிமிடம் தான் நான் வருவேன், அடுத்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் கொடுப்பார் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் அண்ணா கலக்கப்போவது யாரு மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் எனக்குக் கிடைக்காத கல்லூரி வாழ்க்கையை, திரைப்படத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
” என்றார்.

நடிகர் சமுத்திரகனி கூறியதாவது…

“ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது. சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
” என்றார்.

SJ சூர்யா பேசியது…

“இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் உடைய அனுபவங்கள் டான் படத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்த கோடைக்காலத்தில் பல படங்கள் வெளியாகி இருக்கலாம், ஆனால் டான் 100% ஒரு கோடை விருந்தாக இருக்கும். மெர்சல் படத்தின் இணை இயக்குநராக இருந்தபோதே சிபி சார், என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவர்தான் தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும், நல்ல குணமும் அவரை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
” என்றார்.

நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியதாவது…

”இந்தப் படத்தில் பணிபுரிந்ததன் மூலம் எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான நட்பு வட்டாரம் கிடைத்தது. என் கல்லூரி நாட்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருந்தது. சமுத்திரக்கனி சார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் பணிபுரிந்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. அனிருத்தின் ஹிட் ஆல்பத்திற்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான நடனத்தை படத்தில் அமைத்த ஷோபி மாஸ்டருக்கும், லலிதா மாஸ்டருக்கும் நன்றி. நான் இண்டஸ்ட்ரியில் சுமூகமாக பயணிக்கும்படி, இங்குள்ள ரசிகர்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. டான் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்
” என்றார்.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பேசியது…

“இந்தத் தருணம் நான் பல வருடங்களாக காத்திருந்த ஒன்று. எனது கனவுகளை நனவாக்க பெரும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னைத் தகுதி உடையவனாக மாற்றிய அட்லீக்கு நன்றி. அவர் எனது வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களைப் கற்று தந்தார். சிவகார்த்திகேயன் சாரின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. அவரது வெற்றி நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கொரோனா பிரச்சினைகள் உட்பட பல சவால்கள் இருந்தன. ஆனால் அந்த நேரத்திலும், அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

டான் படத்தில், SK சார், நிஜ மற்றும் ரீல்-சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் உயிர் கொடுத்துள்ளார். அனிருத் சார் ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். பெரும் ஆதரவை வழங்கிய ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி. டான் திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்.
 ” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது…

“இந்தப் படத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கியபோது, லைகா லேபிள் லாபத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம். சிபி, டான் படத்தின் ஸ்கிரிப்டை கூறியபோது, அது மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பிரதிபலிக்கும் கதை இது, அதை சிபி மிக அழகாக வடிவமைத்துள்ளார். அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டான் படம் நல்ல வெற்றியடைந்தால், என்னைப் போன்றவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் மிகவும் ரசித்தவர்களைக் கொண்ட ஒரு குழுவாகப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் உடைய கதாபாத்திரம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். எனது கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சிகளில் SJ சூர்யா சாரின் குரலில் மிமிக்ரி செய்யத் தொடங்கி, அதன் மூலம் பிரபலமானேன். படப்பிடிப்பின் போது கூட இதை அவரிடம் சொன்னேன். படத்தில் எனக்கு அறிமுகப் பாடலும், கதாநாயகியுடன் ஒரு பாடலும் இருப்பதால், நான் ஹீரோ இல்லை. இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஹீரோ மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்புகள் உண்டு. இந்தப் படத்தில் பிரியங்கா சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதால், இயக்குநருக்கு அவரை நடிக்க வைப்பது எளிதாக இருந்தது, மேலும் அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது. பாலா, ராஜு, ஷாரிக், ஷிவாங்கி, விஜய் மற்றும் பலர் படத்தில் அசத்தியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது கல்லூரிக்குத் திரும்புவது போல் இருந்தது. சிவாங்கி இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். விலங்கு வெப் தொடரில் பால சரவணனின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பக் குழு இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக இருந்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளை அனிருத் செய்துகொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக தனது படங்களுக்காக இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வருகிறார். எனது படங்களுக்கு அவர் அளித்த ஆதரவு அளப்பரியது. தொற்றுநோயை எதிர்கொள்வதே எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரிய சவாலாக இருந்தது. ஏறக்குறைய அனைத்து காட்சிகளும் கல்லூரி கூட்டத்தை உள்ளடக்கியது, மேலும் முழு குழுவினரின் ஒத்துழைப்புடன் மட்டுமே, இந்த காட்சிகளை எந்த தடையும் இல்லாமல் எங்களால் படமாக்க முடிந்தது. இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திய சிபியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மீதமுள்ளவற்றை பார்வையாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் சார் எங்கள் படத்தை வெளியிடுகிறார், அவர் மூலம் டான் படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காணப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டான் படத்தில் கனவுகளும் லட்சியங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது, எனது குழந்தைப் பருவத்தை மறுபரிசீலனை செய்வது போல் இருந்தது. படம் முடிந்து திரையரங்குகளை விட்டு வெளியில் செல்லும் பார்வையாளர்களுக்கு படம் சில தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எனது ரசிகர்களுக்கு நன்றி
” என்றார்.