‘நாகேஷ் திரையரங்கம்’ பிப்ரவரி 16-ல் வெளியாகிறது..!

டிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ராஜேந்திர M.ராஜன் தயாரித்துள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’.

இந்தப் படத்தில் ‘நெடுஞ்சாலை’ ஆரி ஹீரோவாக நடித்திருக்கிறார், ஆஷ்னா சவேரி ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும், காளி வெங்கட், மாசூம் சங்கர், எம்.ஜி.ஆர். லதா, சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லட்சுமண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நௌஷத், இசை – ஸ்ரீ, படத் தொகுப்பு – தேவராஜ், கலை – ராமலிங்கம், பாடல்கள் – தாமரை, உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், ஜெகன் சேட், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – ராபர்ட், பாம்பே பாஸ்கர், ஆடைகள் – முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு – சோபியா சௌரிராஜன், தினேஷ், VFX – ட்ராட்ஸ்கி மருது, மக்கள் தொடர்பு – வின்சன்.

தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-ம் தேதியன்று சூரியன் பண்பலை ஸ்டூடியோவில் வெளியிடப்பட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நாயகன் ஆரி, நாயகி ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.