நான் வாங்கிய கைதட்டல்களில் இவருக்கும் பங்கு இருக்கிறது.! ஷக்தி சிதம்பரத்தின் மனசாட்சி

shakthi-chidambrmநான் வாங்கிய கைதட்டல்களில் இவருக்கும் பங்கு இருக்கிறது என்று ஷக்தி சிதம்பரம்  மனசாட்சியுடன் பேசினார்.

தேவகலா பிலிம்ஸ் வழங்கும் ‘ஒரேஒரு ராஜா மொக்கராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேறறு மாலை ஆர்.கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் பிரவின் காந்தி பாடல்களை வெளியிட்டார். ஷக்தி சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் பிரவின் காந்தி பேசும்போது”இன்று எந்தச் சுவையும் தேவையில்லை நகைச்சுவை மட்டும் போதும் ஜெயித்து விடலாம். அப்படி உருவாகியுள்ள மொக்கராஜா கச்கைப் போடு போடும். “என்றார் .

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது” என் படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு விழும் கைதட்டடல்களில் பாதி பொன்பிரகாஷையே சேரும் அந்தளவுக்கு என்னுடன் பணியாற்றியவர் “என்றார்.

இசையமைப்பாளர் சுமன் பிச்சு பேசும்போது”சித்ரா அக்காவுடன் நான்  சிறுவயதில் ஓடிப்பிடித்து விளையாடி இருக்கிறேன். சினிமாவில் நுழையும்  18 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.”என்றார்.

கவிஞர் ஏகாதசி பேசும்போது, “என்னை பேச அழைத்த போது தொகுப்பாளர்.  ஏகாதசி என்று மட்டும் அழைத்தார் நான்தான் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியவன். இது கேரளாக்காரர்கள் உருவாக்கியுள்ள படம். எனவே என்னை பாடல் வரிகளுக்கு பாடாய்ப் படுத்தவில்லை இங்கென்றால் உதவி இயக்குநர் முதல் ஆபீஸ் பாய் வரை கொன்னு எடுத்திருவாங்க. இதில் வரும் சின்ன பசங்கபற்றிய பாடல் ‘சூ சூமாரி..’ ‘வெயிலோடு விளையாடு’ வரிசையில் பிரபலமாகும். “என்றார்.

குட்டிநடிகர்கள் விஜய்கணேஷ்,சிசர் மனோகர்மட்டுமல்ல ‘ஈரமான ரோஜாவே ‘சிவாவும் கூட  ப்ளாஷ் பேக்  சோகக் கதைகள் கூறிப்  பேசினார்..
DCIM (32)
நிகழ்ச்சியில் பொன் பிரகாஷ் வரவேற்புரை யாற்றினார்.பாடகி சித்ரா,.இயக்குநர் எம்.ஜீவன் , ஒளிப்பதிவாளர் ஐயப்பன், திரைக்கதையாசிரியர் வினோத் லால், வசனகர்த்தா பொன் பிரகாஷ்,
நாயகன் சஞ்சீவ் முரளி,வில்லன் சாகர்,நாயகி ரக்ஷா ஆகியோரும் பேசினார்கள். படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால், தயாரிப்பாளர் உல்லாஷ் கிளி கொல்லுர் நன்றி கூறினார்கள்.

இது பெரும்பாலும் கேரளாக் காரர்கள், மலையாளிகள் பங்கு பெற்ற படம். இருந்தாலும் தமிழ் எனக்குத் தெரியாது என்றபடி மலையாளத்தில் மலையாளம் கலந்த தமிழில்தான் பேசினார்களே.. தவிர ஆங்கிலத்தில் பேசவில்லை. நம்மூர் அடிமைப்புத்தி கொண்ட தமிழர்கள் என்றால் ‘ஆக்சுவலா’ என்று ஆரம்பித்து தத்துப்பித்து ஆங்கிலத்தில் பிதற்றி இருப்பார்கள்.

மலையாளிகளின் தாய்மொழிப் பற்றுக்கு ஒரு வணக்கம்.