படமாகும் சித்தரின் வாழ்க்கை வரலாறு!

Siddhar Kayilayam movie still - 11ப்ரபஞ்சம் சினி சர்க்யூட் நிறுவனம், ‘சித்தர் கையிலாயம்’ எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் எஸ்.ரமேஷ்.

இயற்கையை மீறிய சக்தி படைத்தவர்களே சித்தர்களாக கருதப்படுகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரங்களில் மரணத்தை வென்ற சித்தர்கள் இன்றும் வாழ்வதாக கருதப்படுகிறது. மனிதர்கள் சிறப்புற வாழ்வதற்காக பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் பல்வேறு காலங்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படியொரு அதீத சக்தி படைத்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை வரலாறுதான், ‘சித்தர் கையிலாயம்’ என்ற பெயரில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகிறது. சித்தரின் வாழ்க்கை வரலாற்றுடன், இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான காதல், மோதல், நகைச்சுவை கலந்த பரபரப்பும் இணைந்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும்.
வெள்ளியங்கிரி மற்றும் அதனை சுற்றிய காட்டுப்பகுதிகளில் நடைபெறும் இந்தப் படத்தின் புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார் அருண். கன்னடத்தில் புகழ்பெற்ற அர்ச்சனாசிங் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடங்களில் சிலம்புச்செல்வம், மணிமாறன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் வெளுத்துக்கட்டு அப்பு, சின்ன ராசு, செல்வகுமார், மாஸ்டர் மௌலி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு இசை அமைக்கிறார் டி.கெளதமசந்திரன். பாடல்களை சதாசிவம் அய்யா, கோவை டாக்டர் ஏ.சேகர், கணியூரான், சாய் எஸ்.ரமேஷ் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்   : எழுத்து – இயக்கம்   : சாய் எஸ்.ரமேஷ்,  ஒளிப்பதிவு   : ஏ.அஜய் ஆதித்
இசை    :  டி.கெளதமசந்திரன்   ,           தயாரிப்பு   : விருதுநகர் மூளிபட்டி எம்.ராமலிங்கம்.