படம் தயாரிக்கும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்!

Stone Bench (93)ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்டிட்லிங் செய்துள்ளது குறுப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படங்களையும் 2016 ல் அவியல் என்கின்ற படத்தின் மூலம் 4 குறும்படத்தினையும் ஒன்றிணைத்து ஒரு மிகபெரிய சாதனை படைத்து குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வழிவகுத்துக் கொடுத்தது.
Stone Bench (58)

தற்பொழுது தனது சொந்த தயாரிப்பினை வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயாரித்துள்ளனர்.

முதலாவதாக ‘மேயாத மான்’ எனும் படத்தினையும் பின்பு “மெர்குரி” எனும் திரைபடத்தையும், கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்சும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது.

மேயாத மானில் நடிகர் வைபவ் நடிக்க நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர்  ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர்  விது ஒளிபதிவு செய்து  சந்தோஷ் நாராயணன் மற்றும்  பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.

Stone Bench (92)இரண்டாவதாக ‘மெர்குரி’ எனும் படத்தினை இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடன புயல் பிரபுதேவா அவர்கள் நடிக்கிறார். படத்தினை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிபதிவு செய்து  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தினை கர்த்திகேயன் சந்தானம் அவர்கள் தயாரித்துள்ளார்.

டெண்ட்கொட்டா உடன் இணைந்து கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்  ரோஹித் எழுதி நடித்துள்ளார் அவருடன் அம்ருத.  சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிபதிவு செய்துள்ளார் சதீஷ் இசையமைத்துள்ளார். கல்யாண்  தயாரித்துள்ளார். வெளியிடும் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

திரு. சோமசேகர் (USA) மற்றும் திரு. கல்ராமன் (USA)  போன்ற புதிய அணியுடன்  இனைந்து பணியாற்றுவதில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் பெருமையும் நல்ல மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.