பரத் நடிக்கும் புதிய படம்’என்னோடு விளையாடு’

Sh_34ரேயான் ஸ்டுடியோஸ் சார்பில் கே.கீதா கிருஷ்ணசாமி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ என்னோடு விளையாடு “

இந்த படத்தில் இரு நாயகர்கள் அவர்களில் ஒருவன் ஒவ்வொரு நொடியும் ஜாலியாய் பொழுதை கழிக்க சூதாட்டத்தில் ஈடுபடுகிறான். மற்றொருவன் பிடித்தமான வேலை அதற்கேற்ற சம்பளம்   என சந்தோஷமாக வாழ்கிறான்.

முரண் பட்ட வாழ்கையின் பாதையில் பயணிக்கும் இரு நாயகர்களுக்கும்  வாழ்க்கையே கேள்விக் குறியாக்கிவிடும் அளவிற்கு எதிர்பாராத பெரும் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  அந்த பிரச்னையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து அதிரடி திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு.  சுவாரஸ்யம் குறையாத கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது என்னோடு விளையாடு படம்.

நாயகர்களாக பரத் மற்றும் கதிர் நடிக்கிறார்கள். பரத்தின் காதலியாக சாந்தினி, கதிரின் காதலியாக சஞ்சிதாஷெட்டி நடிக்க முக்கிய கதாப்பாதிரத்தில் ராதாரவி, யோக் ஜே.பி மற்றும் கமலா தியேட்டர் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு            –       யுவராஜ்

எடிட்டிங்     –        கோபி கிருஷ்ணா

இசை           –        மோசஸ்

பாடல்கள்   –        நா.முத்துக்குமார், விவேகா, சாரதி, கதிர்மொழி

நடனம்        –        விஜி

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் –  அருண் கிருஷ்ணசாமி

தயாரிப்பு   –  கே.கீதா கிருஷ்ணசாமி

படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.