பரத் நடிக்கும் பேய்ப் படம் ‘பொட்டு’

barat-peyவெற்றி பெற்ற படங்களான மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் “ சவுகார்பேட்டை “ படம் இம்மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் சவுகார்பேட்டை படம் எல்லா ஏரியாவும் விற்றுத் தீர்ந்து விட்டது. படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதாலும்  தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குநர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர். அத்துடன் அடுத்த படமான பொட்டுவையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரிக் கிறார்கள். “ பொட்டு “ படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறார். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார். எடிட்டிங் – எலீசா பாடல்கள் – நா.முத்துகுமார், விவேகா ஸ்டன்ட் – கனல்கண்ணன் . நடனம் – ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை – சங்கர் தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்.  எழுதி இயக்குபவர் வடிவுடையான். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது. சவுகார்பேட்டை போன்றே இதுவும் திகில் கலந்த பேய் கதையாக உருவாகிறது. மெடிக்கல் காலேஜ் பின்னணியில் பேய்க்கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் என்றார் வடிவுடையான்.