பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை”

avsk3ஒரு  பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு  குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது  இந்த கதை நடக்கும் களம் .இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள்  யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளை செய்து  தருபவர்கள் உதாரணத்துக்கு பேப்பர் போடுபவர்கள், இஸ்திரி
செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர்  போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரை பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். பணியாளர்களுக்கும், அங்கு புதிதாக  குடிவந்த  சட்டவிரோதிகளுக்கும் அங்கேயே  குடியிருக்கும்  தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் “ஆயா வட சுட்ட கதை” படத்தின் கதை.

இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பது பார்த்தால் புரியும்..சுருக்கமாக சொல்வதென்றால் இது ஒரு முக்கோண ஏமாற்றுக் கதை.இதில் கதாநாயகி துறுதுறுப்பான ஒரு இளம் பெண்.. அந்த இளைஞர்களோடு பழகிவருபவள்.. நட்பாக மட்டுமே.aaya-vada-sutta1