பலரின் உதவியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த டெல்லி கணேஷ்!

ennul1000-3rsடெல்லி கணேஷின் மகன் மகா அறிமுகமாகும் படம் ‘என்னுள் ஆயிரம்’ . இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.  மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ள மரினா நாயகி .டெல்லி கணேஷ் தன் ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் அறிமுகவிழா இன்று நடைபெற்றது. அதில் நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது

” நான் டெல்லியிலிருந்து இங்கு வந்து காத்தாடி ராமமூர்த்தி குழுவில் நாடகத்தில் நடித்தேன். பிறகு ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்  என்று சொந்த நாடகக்குழு தொடங்கி இந்தியா முழுக்க நாடகங்கள் போட்டு நிறைய சம்பாதித்தேன் என்னை கே.பி சினிமாவில் அறிமுகம் செய்தார். என் மகனை எங்கள் விருப்பத்துக்குப் படிக்க வைத்தோம் .ஆனால் அவன் விருப்பம் சினிமா நடிப்பு என்று இருந்தது.

வேறு யார் மூலமாக பல நிபந்தனைகளுடன் அவனை நடிக்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. நாமே தயாரித்து அறிமுகப் படுத்தலாம் என்று முடிவு செய்தேன். 50 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள். இதில் பலரை அறிமுகம் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.

delhi-mahaஇப்படத்தை ஏ எல். விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கிள்ளார். நீரவ்ஷாவின் உதவியாளர் அதிசயராஜன் ஒளிப்பதிவாளர் , ஆண்டனியின் உதவியாளர் சண்முகம்தான் எடிட்டர்,  தோட்டா தரணி உதவியாளர் ஸ்ரீஜே கலை இயக்குநர்  இப்படிப் பல உதவியாளர்கள் அறிமுகமாகியுள்ளனர்.மலையாளத்தில் சில படங்கள் இசைஅமைத்த இசைஅமைப்பாளர் கோபிசுந்தர் தமிழில் அறிமுகமாகியுள்ளார் மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ள மரினாதான் கதாநாயகி.மரினாவைஓட்டலில் எல்லாம் தங்க வைக்கவில்லை. என் வீட்டு கெஸ்ட் ஹவுஸில்தான் தங்கினார். போகும் போது பாசத்தோடு பிரிய முடியாமல் கண்ணீரோடு விடைபெற்றார். இதில் பங்கு பெற்ற திரையுலகின் நண்பர்கள் பலரும் சம்பள விஷயத்தில்  கொடுக்கிறதைக் கொடுங்க எனக்கூறி  வியக்க வைததனர்
இதில் நான் சாதாரண ஆள்தான். தயாரிப்பாளர்  என நினைக்கவில்லை.இதில் பலருடைய உழைப்பு இருக்கிறது. படம் வெற்றி மக்கள் கையில்தான் இருக்கிறது என்றுநம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.” என்றார். விழாவில் படக்குழுவினரும் பேசினார்கள்.