பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தியேட்டரில் வாங்க அனுமதிக்க வேண்டும் பிரதமருக்கு நடிகர் மன்சூர் வேண்டுகோள்

mansoorநடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் சென்னையில

செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: 
“பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுதும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக திரைப்படத்துறை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நான் பிரதமரின் அறிவிப்பை குறை கூறவில்லை. அதே நேரம் அந்த அறிவிப்பால் பணம் படைத்த தொழிலதிபர்கள் யாரும் கவலைப்படவில்லை. 
அன்றாட வாழ்க்கைக்கு உழைக்கும் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் குறிப்பாக எங்கள் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 
திரைப்பட தொழில் முற்றிலும் முடங்கி உள்ளதால் பழைய 500/1000 ரூபாய் நோட்டுகள் மாற்ற விதித்த நிபந்தனையில் திரையரங்குகளையும் இணைத்து கொள்ள வேண்டும். 
திரையரங்குகளில் மார்ச் 31வரை பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் கொஞ்சமாவது நஷ்டத்தில் இருந்து தப்பிப்பார்கள். 

நான் இப்படி சொல்வதால் மன்சூர் அலிகான் கறுப்பு பணம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும்,  கறுப்பு பணம் வைத்திருக்கிறார் என்றும் சொல்வார்கள். நான் எப்போதும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன் என் கணக்கு வழக்குகள் எல்லாம் சரியாக உள்ளது. நான் எதற்கும் அஞ்சாதவன். என் துறை தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். மற்றவர்கள் சொல்ல தயங்குகிறார்கள். நான் சொல்லிவிடுகிறேன். 
பிரதமர் மோடி அல்லது மற்ற எல்லா கட்சியினரும் பணம்  செலவழித்து தான் பதவிக்கு வந்திருப்பார்கள். மறுபடியும் சொல்கிறேன் பிரதமரின் அறிவிப்பை குறை சொல்லவில்லை. நடைமுறை சிக்கல் தீரும்வரை தியேட்டர்களில் பழைய நோட்டுகளை வாங்க பிரதமர் அனுமதிக்க வேண்டும். 
mans1

இப்படி சொல்லி விளம்பரம் தேடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்து அறிக்கை விட்டதை இப்போது உணர்ந்திருப்பார். 
இந்த பிரச்னையில் திரையுலகில் ஒற்றுமையோடு இந்த விஷயத்தை அணுகாதது வருத்தமளிக்கிறது.இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.