பாபி சிம்ஹா நாயகனாக மிரட்டும் ‘பாம்பு சட்டை’

pampusattai2இயக்குநர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும்R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன்   ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பு சட்டை’.

“சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாப்பாத்திரம்.  ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டபடி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.