‘பாம்பு சட்டை’ உரித்து விரைவில் சீறும்!

paambu22“ பாபி  சிம்ஹா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தாமிரபரணி’ புகழ் முக்தா பானு, சார்லி , K ராஜன், சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், RV  உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

“ ’பாம்பு சட்டை’ படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடித்தாகிவிட்டது. படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பதற்கு உதவியாய் இருந்த அத்தனை கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் சீறும்” எனக் கூறினார் இளம் இயக்குநர் ஆடம் தாசன்.