பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !

  Master director K Balachander Passed away-Onlookers Mediaபாலசந்தர் பற்றி முழுதும் அறிய  “புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன்”  என்கிற அவரது இந்தப் பழைய நேர்காணலைப் படியுங்கள்.பாலசந்தர் பற்றிய ஒரு முழு சித்திரம் தெரியலாம்!

மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.அவரிடம் சில கேள்விகள்  !

k balachanderவசனங்களின் ஆட்சி நட்சத்திர ஆதிக்கம் விஷூவல் தாக்கம் காட்சிகளில் கவர்ச்சி என பல்வேறு கட்டங்களிலும் எப்படி உங்களால் மட்டும் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று நிற்க முடிகிறது?

முதலில் தாக்குப்பிடித்து என்ற வார்த்தைப் பிரயோகம் தப்பாகத் தெரிகிறது எனக்கு. ஏதோ ஒரு Sigma வோட உள்ள வார்த்தையாய் படுது எனக்கு. நான் ஒரு creative ரைட்டர். டைரக்டர் என்று சொல்வதற்கு முன். ரசிகன், நான் ஒரு ரசிகன் பிறகுதான் எழுத்தாளர், இயக்குநர் எல்லாம் என்னால் எப்படி எந்தெந்த காலகட்டங்களில் ஜனங்களோடு சேர்ந்து திரைப்படங்களை ரசிக்க முடிகிறதோ அதுபோலத்தான் அந்தந்த காலகட்டங்களில் நானும் மாறிக்கொண்டு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு வருகிறேன். என்னை நானே மாற்றிக்கொண்டு உருவாக்கி வருவதால் தரம் தாழ்ந்து போவதாக அர்த்தம் அல்ல. சுற்றியுள்ள Contemporary Films ஐ பார்த்துப் பார்த்து அதன் தாக்கத்தில் என்னை மாற்றிக் கொண்டேன் என்று சொல்வதை விட என் ரசனையை மாற்றிக் கொண்டேன் என்று சொல்லவே விரும்புகிறேன். அவ்வப்போது ஏற்படுகிற சமுதாயப் பிரச்சினைகளை எரிந்து கொண்டிருக்கிற சமகால ஏக்கங்களை பார்க்கும்போது அதை எடுத்து நம் படங்களில் கையாண்டாலென்ன என்று தோன்றுகிறது.

balachander-2bசமகாலப் பிரச்சினைகள் எரிந்து கொண்டிருக்கும் ஏக்கங்கள் போன்றவற்றை எப்படி உங்களால் பிரதிபலிக்க முடிகிறது?

ஒரு Film maker என்பவன் அரசியல்வாதி மாதிரி. அதாவது politician எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அது போலவே film maker ம் நேர்மையாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நேர்மையாக இல்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். Film maker நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெட்டதைச் செய்துவிடக்கூடாது.

கெட்டதை என் படங்கள் மூலமாக புகுத்தி விடக்கூடாது என்ற conviction உடன் இருக்கிறேன். அந்த conviction தான் சமகாலப் பிரச்சினைகளை என் படங்களில் வைப்பதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செத்துப்போன விஷயங்களை வைத்துப் படம் பண்ணுவதில் எனக்கு விருப்பமே கிடையாது. இன்று, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை வைத்து கதை செய்வதில் எனக்கு ஆர்வம் வராது. ஏனென்றால் அது dead affair. செத்துப் போன விஷயம். இன்னமும் நாம் தீண்டாமை பிரச்சினையை வைத்து கதை பண்ணிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் தீண்டாமை என்பதெல்லாம் இன்று ஒழிந்து போன விஷயம். ஏதோ அங்கங்கே தலை காட்டலாம். ஆனால் அது இன்றைக்கு தலையாய பிரச்சினை கிடையாது. அதனால் இன்றுள்ள நடைமுறையில் சந்திக்கிற பிரச்சினைகள்தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றன. அதனால்தான் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களை தர முடிகிறது.

balac-cppஇப்போதுள்ள தங்கள் படங்களில் பழைய attack பாணி மாறி advice- க்கு இறங்கி விட்டதாகத் தோன்றுகிறதே – வயது, பக்குவம் காரணமா..?

நிச்சயம் வயது, பக்குவம் காரணமாக இருக்கலாம். எப்போதும் Attack செய்து கொண்டிருப்பது ஒரு பாணி. அதிலிருந்து மாறி அவ்வப்போது Advice பண்ணுவது ஒரு பாணி. திரைப்படங்களில் Advice பண்ணலாமா கூடாதா என்பது debatable point தான் – சர்ச்சைக்குரிய விஷயம். முன்பே சொன்னேன் film maker க்கு அரசியல்வாதி மாதிரி social responsibility சமூக பிரக்ஞை இருக்க வேண்டும். ஆக…. திரைப்படங்கள் மூலமாக நல்ல விஷயங்களை Advisable ஆக இறங்கிச் சொல்வதில் தவறில்லை. அதுவும் இந்த வயதில் தோன்றுகிறது. இதையே பத்து வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் வேறுவிதமாகச் சொல்லியிருப்பேன். அட்வைஸ் பண்ணுவதற்கு திரைப்படத்திலிருப்பவன் லாயக்கில்லாதவன். அவன் செய்வது வேண்டாத வேலை. ஜனங்க ரசிக்கும் படியாக பொழுது போக்குப்படம் ஒன்றைக் கொடுப்பதுதான் அவன் கடமை என்று கூட சொல்லியிருப்பேன். ஆனால் இன்று இந்தக் காலகட்டத்தில் நாட்டில் உள்ள Moral Disintegration ஐ மிக அருகிலிருந்து பார்க்கிற இன்றைய சூழலில் திரைப்படத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல அட்வைஸ் லெவலுக்கு இறங்கி வருவதில் தப்பில்லை என்ற Metamorphasis க்கு நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஓ.கே.

balachander-4நீங்கள் அழைத்தால் மணிரத்னம் டின்னருக்கு வருவார். அப்படியிருக்க அதை நீங்கள் ஒரு பேறு என்று கருதி பேட்டி கொடுத்திருப்பதை ஏற்க முடியவில்லையே?

உங்கள் கேள்வியைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அழைக்கிறது யாரை? என்னைப்போல திரையுலகத்தில் இருக்கிற Intelligent – Contemporary Director ஒருவரைத்தான். என்னோடு தொழில்முறையில் ஈடுபட்டிருக்கிற ஒரு நல்ல கலைஞனை என் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கணும். ஒரு வேளை அவர் ஒத்துக்கிட்டா என் பேறுன்னு சொன்னது எனக்கு எந்த விதத்திலும் தப்பாகப்படவில்லை. சொல்லப்போனால் சாதாரணமா இந்த மாதிரியெல்லாம் கூப்பிட்டால் அவர் வரமாட்டார்… அவர் நல்ல கலைஞன்… அவர் வந்தால் நிச்சயமா நான் ஒரு பேறாகத்தான் நினைக்கிறேன். சூதுவாது நிறைஞ்ச இந்த உலகத்தில் யாரோ ஒரு நாலாந்தர அரசியல்வாதியை வீட்டுக்கு டின்னருக்குக் கூப்பிட்டால்தான் ஏத்துக்க முடியலைன்னு நீங்க சொல்லலாம். ஆனால் திரைக்கலைக்காகவே 24 மணிநேரமும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபடுகிற ஒரு நல்ல கலைஞனை – அகில இந்தியாவிலும் பேசப்படுகிற இயக்குநர் என் வீட்டுக்கு வந்து டின்னர் சாப்பிட்டா நிச்சயமாக நான் அதை பேறாகத்தான் கருதுவேன்.

Master director K Balachander Passed away-Onlookers Mediaநடிகர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே பாலச்சந்தர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்ததில்லை. இன்று நட்சத்திரத் துணை தேடுவது ஏன்?

நான் திரைத்துறையில் நுழைந்த போதே நட்சத்திரங்களை ஒழித்துக் கட்டுவது என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டேனா? இல்லை… நட்சத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் யாரை எப்படிப்பட்ட கதைகளில் எந்தெந்த நேரத்தில் எப்படிப்பட்ட பாத்திரங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும் – நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு பண்ண வேண்டியது ஓர் இயக்குநரின் Prerogative  உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. இந்தக் கேரக்டருக்கு ஏன் அவரைப் போட்டீங்கன்னு நீங்க கேட்கக் கூடாது. எனக்கு அவர் வேணும்னு தோணுது போடுகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் தோன்றாமலிருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. புதுப்புது அர்த்தங்கள்னு ஒரு படம் எடுத்தேன். அதுல ஒரு கேரக்டருக்கு ஓர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டது. அதற்கு கீதாவைப் போட்டேன். கீதாவை தேர்ந்தெடுக்கும் முன்னாடி எத்தனை விதமா நான் யோசித்துப் பார்த்திருப்பேன்னு உங்களுக்கு தெரியுமா? அதற்கு புது ஆர்ட்டிஸ்ட்டை போட முடியாது. அறிமுகம் செய்கிற ஒரு நடிகையைப் போட்டு, ஒரு மனைவியா காட்ட முடியாது. அதற்கு perform பண்ஹ ஆர்ட்டிஸ்ட், கொஞ்சம் maturity யா இருக்கணும்னு எதிர்பார்த்தேன். என்னதான் நடிச்சாலும் புதுமுகத்திற்கு கேரக்டருக்கேற்ற maturity இருக்காது. அதனால்தான் கீதாவைப் போட்டேன். அதேசமயம் அந்த ஹீரோ கோவாவில் சந்திக்கிற கேரக்டருக்கு young ஆ fresh ஆ ஒரு முகம் தேவைப்பட்டதால் சித்தாரான்னு ஒரு newface ஐ போட்டேன். ஏன் கீதாவைப் போட்டீங்கன்னு நீங்க கேட்டால் அதில் அர்த்தம் இருக்கா? இந்த நீணீstவீஸீரீ அவ்வளவு சுலபமான வேலை இல்லை. கதை ரெடியான பின், நீணீstவீஸீரீ கிற்காக நான் பல நாள் எடுத்துக்குவேன். இப்ப கமலை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று எனக்குத் தோன்றினால் அவரும் இஷ்டப்படுகிறார்னு வைத்துக் கொண்டால் கமலுக்காகத்தான் ஒரு கதையைத் தயார் செய்ய வேண்டியிருக்கும். ஏன் என்றால் கமல் நிறைய கேரக்டர்ஸ் பண்ணியிருக்கிறார். அரருக்கேற்ற மாதிரிதான் கதை அமைக்க வேண்டும். இப்போ பிரபு இருக்கார். ரொம்ப நாளா சந்திச்சிட்டு வர்றேன். ஒரு சமயம் கூட சொன்னார். சார் உங்க டைரக்ஷன்ல நான் நடிக்க விரும்புறேன்னு அதுவும் ஒரு ஐம்பது படங்களில் நடிச்ச பின்னாடித்தான் கேட்டார். அதை அப்படியே மனதிலேயே வைத்திருந்தேன். அவரை வைத்து படம் பண்ணினால் என்ன என்று தோன்றியபோது அவர் நூறு படத்தை முடிச்சிட்டார். அதற்காக நட்சத்திர நடிகர்களை வைத்து நான் படம் டைரக்ட் பண்ணமாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்? அவரும் நடிக்க விருப்பப்பட்டார். எனக்கும் ஆசை. சரி… பிரபுவை வைத்துப் படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சபோது அவருக்காக, ஒரு கதையை ரெடி செய்தேன். அதிலென்ன தவறு? உடனே நடிகர்களுக்காக கதை எழுதலாமான்னு கேட்கக்கூடாது. பாலசந்தர் எந்த நட்சத்திரத்திற்கும் விரோதியல்ல. எனக்கு எல்லா நட்சத்திரங்களும் நண்பர்கள்தான். நட்சத்திரங்களை வைத்துப் படமெடுக்கும் போது அவர்களுக்கேற்ற கதை எழுதப்பட வேண்டுவதுதான் சினிமா. அவர்களை ஓரம்கட்டி விட்டு கதை பண்ணக்கூடாது. திரையுலக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிரிடையாக போய் முட்டி மோதிச் சாகக் கூடாது.

நீங்கள் பெருமை கொள்ள வைக்கும் இயக்குநர் சிகரம். ஆனால் சாதாரண தயாரிப்பாளர். ஆம் தானே உங்கள் பதில்..?

ஆம். நான் பெருமை கொள்ள வைக்கும் இயக்குநர் சிகரம். நீங்க சொல்றதால ஏத்துக்கறேன். நீங்கள் சாதாரண தயாரிப்பாளர்தானே? ஆம்… ரோஜா என்கிற ஒரு நல்ல படத்தைக் கொடுத்த சாதாரண தயாரிப்பாளர்தான். நல்ல தயாரிப்பாளர், சாதாரண தயாரிப்பாளர் என்பதற்கு என்ன definition? எத்தனையோ படங்கள் எடுத்திருக்கோம். எத்தனையோ நடிகர்கள் எங்கள் படங்களில் நடித்திருக்கிறார்கள். எத்தனையோ துணை நடிகர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அங்கெல்லாம் போய்க் கேட்டுப் பாருங்கள். அதாவது பாலசந்தர் கம்பெனியிலிருந்து உங்களுக்கு பணம் ஏதாவது பீuமீ இருக்கான்னு கேட்டுப் பாருங்க. சத்தியமா இருக்காது. அவங்க கவிதாலயா கம்பெனியில வேலை செஞ்சது எங்களுக்கு பெருமையா இருக்குன்னுதான் சொல்வாங்க. ஆக… சாதாரண தயாரிப்பாளர்ங்கறதை ஒத்துக்க மாட்டேன். மிகப் பெரிய வெற்றிப் படங்களை எடுத்திருக்கிற தயாரிப்பாளர். ரோஜா மூலம் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர். சாந்தாராம் பெயரில் இருக்கிற ஜிக்ஷீust தேசிய அளவில் இரண்டாவது மிகச் சிறந்த திரைப்படம் எடுத்ததற்காக விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது. ஏ.வி.எம். என்ற நிறுவனத்திற்குப் பிறகு மரியாதைக்குரிய திரைப்பட நிறுவனம் என் கவிதாலயா நிறுவனம். எனவே சத்தியமாக நான் சாதாரண தயாரிப்பாளர் என்பதை ஏத்துக்கவே மாட்டேன்.

Master director K Balachander Passed away-Onlookers Mediaரஜினியை வைத்து படம் பண்ணும் நீங்கள், அவரை இயக்கத் தயங்குவது அவரை அவர் பாணியிலேயே நிலைக்க  வைக்கும் அலட்சியமா? அவர் பாணிக்கு நீங்கள் இறங்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கையா?

இந்தக் கேள்வி mischievous ஆ தெரியுது. அவரை இயக்கத் தயங்குவது அவர் பாணியிலேயே நிலைக்க வைக்கும் அலட்சியமான்னா என்ன? அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா ஆகியிருக்காருல்லே. அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கணும்னு நினைக்கிறது லட்சியமாகவே இருக்கட்டும். இதில் அலட்சியமென்ன..? அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கணும்னு நான் நினைக்கிறது லட்சியமாகவே இருக்கட்டுமே. He should continue to be a Super star.  அவர் பாணிக்கு இறங்கி விடக் கூடாது என்ற எச்சரிக்கையாங்கறீங்க… இதுக்கு நான் பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். யாராலும் நினைச்சுப் பார்க்க முடியாத Super Star இமேஜ் ரஜினிக்கு வந்திருக்கு. இதுவரை யாருக்கும் கிடைக்காத இமேஜ் அது. அந்த இமேஜை – நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக்கணும்னு நினைக்கிறபோது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி அப்படிப்பட்ட முறையில் என்னால் படத்தை இயக்க முடியுமான்னு என் மேல் ஏற்பட்டிருக்கிற பயத்தினால்தான் அவரை வைத்து இயக்கத் தயங்குகிறேன். ஒரு சின்ன hesitation. அவ்வளவுதான். நாம ஏதாவது ஒன்றைச் செய்யப் போய் அது எதிரிடையா result ஐ கொடுக்கக் கூடாதுங்கற பயம்தான் காரணம்.

முன்பெல்லாம் நீங்கள் அறிமுகப்படுத்தும் நடிகர்களை அவர்கள் நட்சத்திரங்களாகும் வரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்து பட்டை தீட்டுவீர்கள். ஆனால், இப்போது அறிமுகத்தோடு விட்டு விடுகிறீர்களே ஏன்?

அப்படி நான் அறிமுகப்படுத்தும் நடிகர்களை, பட்டை தீட்டும் வாய்ப்புக்கு மற்ற இயக்குனர்களிடம் விட்டு விடுகிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன். அது மட்டுமல்ல… முன்பு வருஷத்துக்கு மூன்று படங்களை இயக்கினேன். இப்போது வருஷத்துக்கு ஒரு படம்தான். நான் அறிமுகப்படுத்தினவங்க என் அடுத்த படத்துல நடிக்க வைக்கிறதுக்குள் பிரபலமாகி விடறாங்க. பிஸியாவும் ஆய்டுறாங்க. நான் கூப்பிட்டா வருவாங்க என்றாலும் ஏன் நாம் disturb பண்ணனும்னு விட்டுட வேண்டியிருக்கு.

ரஜினி, கமல் போன்று இனி ஒரு நட்சத்திரம் உருவாகும் வாய்ப்பே இல்லை எனப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்குக் கிடைத்த Variety of roles, திறமை மிக்க இயக்குநர்களிடம் பயிற்சி, தவறும்போது தூக்கிவிட உங்களைப் போன்றவர்களின் கைகள்… போன்றவை இன்றைய – இளைஞர்களுக்கு அறிமுகங்களுக்குக் கிடைக்கவில்லையே..?

இது கேள்வி மாதிரி தெரியலை. statement இதுபற்றி தனியா நான் ஒன்றும் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஒரு படத்தில் அறிமுகப்படுத்திய உடனேயே அவர் பிரபலமாகும் போது, அறிமுகப்படுத்தின இயக்குனருக்கே அவருடைய தேதி கிடைக்கலைங்கற போது எப்படி அவரை பட்டை தீட்டுவாருன்னு எதிர்பார்க்கறீங்க? என் நண்பர் பாரதிராஜா நெப்போலியன்னு ஒரு நடிகரை அறிமுகப்படுத்தினார். மறுபடியும் கிழக்குச் சீமையிலேயில் ஒரு Role கொடுத்திருக்கார். அந்த ரோல் கொடுத்ததும் அவருடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் போச்சு. ஆக… சந்தர்ப்பங்கள் அமையறதுதான். கிழக்குச் சீமையிலே மாதிரி ஒரு  கதை அமையவேண்டும். அதுல நெப்போலியனுக்கேற்ற கேரக்டர் அமைய வேண்டும். அவரைப் போடத் தோன்ற வேண்டும். அவரது டேட்ஸ் அமையவேண்டும். பிறகு தான் நடிக்க வைக்கவேண்டும். ஆக… இவ்வளவு விஷயங்கள் அமைந்த பிறகுதான் நெப்போலியனுக்கு பாரதிராஜாவால் நல்ல credit கிடைத்திருக்கிறது. இது அமைய பல circumstances இருக்கின்றன.

Master director K Balachander Passed away-Onlookers Mediaமரோ சரித்ரா மாதிரி ஏக்துஜே கேலியே மாதிரி எப்போது இன்னொரு முறை அசத்தப் போகிறீர்கள்?

ஒவ்வொரு படத்தையும் அசத்த வேண்டும் என்றுதான் நினைப்பேன். சில படங்களில் நிஜமாகவே அசத்திடுவேன். சில படங்களிலே இவர் அசத்தினது போதாதுன்னு சொல்றீங்க. எல்லாப் படங்களுமே மரோ சரித்ரா மாதிரி ஏக் துஜே கேலியே மாதிரி அமைய முடியாது.

நான் கேட்பது அதுமாதிரி காதல் கதை எப்போது தரப் போகிறீர்கள் என்று..?

ஆமாம்… Love Story ன்னால் எல்லாரும் விழுந்துடறீங்க. இன்றைக்குள்ள இளைஞர்கள் எல்லாம் படத்துல வருகிற காதலன் – காதலி பிரச்சினையை தங்கள் பிரச்சினையாக நினைக்கிறாங்க. அதனால அவை வெற்றி பெற்றன. ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’ கூட வெவ்வேறு வகை அசத்தல்தான்; வெற்றிகள்தான்.

பாடல் காட்சிகளில்  பாலசந்தர் பாணி என்று ஒன்று இருந்தது. இன்று அது போய் நீங்களும் விளம்பரப் பட பாணியில் இறங்கி விட்டீர்களே?

உங்களுக்கு பழைய கேள்வி ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். என்ன கேள்வி தெரியுமா? பல கட்டங்களிலும் எப்படி உங்களால் தாக்குப்பிடித்து வெற்றி பெற முடிகிறது என்று முதல் கேள்வியாக கேட்டீர்களே. அதையே இப்போது ஞாபகத்துக்கு கொண்டு வருகிறேன். என்னையே நான் Metamorphasis பணணிக் கொள்வதோ அல்லது என் ரசனையையோ நான் மாற்றிக் கொள்ள விரும்புவதோ என்னுடைய Prerogative– உரிமை அப்படிங்கற முறையில் பாலசந்தர் பாணி என்பதையே மாற்றிக்கொள்ள நினைப்பேனில்லையா? இன்றைக்குள்ள இளைஞர்களுடன் போட்டி போடும்போது அவர்களுடைய முறையில் படம் எடுக்கறதில் என்ன தவறு? இன்றைக்குள்ள ரசிகர்கள் வேகத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கேற்றபடி வேகமான பாணியில் பாடல்களைக் கொடுத்தால்தான் ரசிக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். பாலசந்தர் பாணியிலேயே பாலசந்தர் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறென்று எனக்குத் தோன்றுகிறது. என் பாணியிலிருந்து நானே மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதைத்தான் நீங்களும் எதிர்பார்க்க வேண்டும். நான் பாலசந்தர் பாணியிலிருந்து மாறி மணிரத்னம் பாணிக்கு மாறலாம். மணிரத்னம் பாலசந்தர் பாணிக்கு வரலாம் – வரவேண்டும். வந்தால்தான் அது evolution.

ஆனாலும் இப்போது கூட எந்தெந்தப் பாடல்களுக்கு எந்த முறையில் இயக்க வேண்டும் என்கிறதில் மனசுக்குள் ஒரு பார்முலா போட்டிருப்பேன். அந்த பார்முலாவிலிருந்து நான் வெளியே வரமாட்டேன். என்ன சொன்னாலும் பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் ஜனங்களை சென்றடைய வேண்டும் என்பதில் என்னைவிட யாரும் அக்கறை எடுத்துக் கொள்ள முடியாது.

Master director K Balachander Passed away-Onlookers Mediaஇளையராஜாவுடன் என்ன தகராறு? இருந்தும்… இருவருமே தனித்தனியாகப் பாராட்டிக் கொள்கிறீர்களே..?

இதெல்லாம் நீங்களா உண்டு பண்ணிக்கிட்ட விஷயம். எனக்கும் இளையராஜாவுக்கும் எந்தத் தகராறும் கிடையாது. எம்.எஸ்.விக்கு அப்புறம் இளையராஜாவுடன் பணிபுரிய ஆரம்பித்தபோது எம்.எஸ்.விக்கும் எனக்கும் என்ன தகராறு? ஒன்றும் இல்லை. அதே மாதிரி குமாருடன் சக்சஸ் ஃபுல்லா பண்ணிக்கிட்டிருந்தபோது எம்.எஸ்.வி.கிட்டே வந்தேன். அப்போ குமாருக்கும் எனக்கும் என்ன தகராறு..? ஒண்ணும் கிடையாது. ஆக தகராறு எல்லாம் எந்த விதத்திலும் கிடையாது. ஏதோ நீங்களாக கற்பனை பண்ணிக்கிட்டு ஏதேதோ கேட்கறீங்க. இன்னைக்கும் சொல்றேன் நிச்சயமாக இளையராஜா மாதிரி ஒரு இசை மேதையை உலகத்திலேயே பார்க்க முடியாது. தமிழகத்திற்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இசைக் கலைஞர் அவர்.

பத்திரிகையாளர்களுடன் அடிக்கடி மோதுகிறீர்களே ஏன்..? அபிப்ராயங்கள் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது உங்கள் வாதமா?

மோதலும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சில நேரங்களில் வரும் out burst – complex out burst(?) அதாவது புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன். அது இல்லாத போது எனக்கு என்னை அறியாமல் சின்னதா கோபம் வந்துவிடும். அதாவது தனிநபர் அபிப்ராயங்களுக்கு மரியாதை கொடுப்பவன் நான். அதில் சூதும் வாதும் இருக்கக்கூடாது. ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு பத்திரிகைக்காக ஒருவர் என்கிட்டே interview வுக்காக வந்தார். நானும் நேரம் ஒதுக்கி பேசிக்கிட்டிருந்தேன். கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும்போது தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி refer பண்ணினேன். உடனே நான் தண்ணீர் தண்ணீர் பார்க்கலைன்னார். என் முக்கியமான படம் அது. அதை பார்க்காமலேயே என்கிட்ட எப்படி இன்டர்வியூவுக்கு வந்தீங்கன்னு கோபப்பட்டேன். அதனால் அவர்கிட்டே நான் மோதுவாக எண்ணியிருக்கலாம். அது என் சுபாவம். அவர் அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது. என் புதுப்புது அர்த்தங்கள் படத்தைப் பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தாங்க. என்ன தெரியுமா? ஒரு கத்துக்குட்டி டைரக்டர் எடுத்த படம் மாதிரி இருக்குன்னு எழுதியிருந்தாங்க. அந்த படத்துக்கு சிறந்த படம்னு தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. பிலிம் ஃபேர் பத்திரிகையின் சிறந்த இயக்குநர் பரிசு பெற்றது. இதுமாதிரி தனி நபரின் சூதும் வாதும் நிறைஞ்ச மாதிரி விமர்சனங்கள் இருக்கிறதால் தான் அந்த மாதிரி நேரத்தில் ரொம்ப கோபம் வருகிறது.

பொதுவாக ஒரு காட்சி பிடிக்கலைன்னா எனக்கு அது பிடிக்கலைன்னு நீங்க சொல்லிட்டா, சரிய்யா… அது உன்னுடைய அபிப்ராயம். ஆனால் எனக்கு அது பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய்விடுவேன். ஆனால் பொறுப்பான ஒரு பத்திரிகையில் விமர்சனம் எழுதும்போது உனக்கு அது பிடிக்கவே இல்லைன்னாலும் பாலசந்தர் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். இன்னும் அவரிடம் எதிர்பார்த்தோம் என்று சொல்லிக் கொள்வது வேறு. ஆனால் ஒரு கத்துக்குட்டி டைரக்டர் இயக்கியது மாதிரி இருக்கிறது என்று எழுதுவது ஒரு விஷமத்தனமான statement அதற்குப் பதிலா பாலசந்தரிடம் இன்னும் எதிர்பார்த்தோம் என்று எழுதினால் நான் உங்களிடம் சண்டைப்போட நியாயமே இருக்காது.

இப்பவும் சொல்றேன். எந்த சந்தர்ப்பத்திலேயும் பத்திரிகையாளர்களோடு எனக்கு மோதல் கிடையாது.

Master director K Balachander Passed away-Onlookers Mediaஉங்கள் படம், பாலசந்தர் படம்தான் யார் நடித்திருந்தாலும் அப்படியிருக்க அந்தக் காலம் தொட்டு தொடரும் பாடல்கள் அவசியமா?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். பாட்டு என்பதை திரைப்படத்தில் வைத்தால் அது ஒரு பாவமா என்ன? அதாவது அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சங்கீதம் என்பது இந்தியர்களின் குறிப்பா தமிழ் ரசிகர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்று. Music என்பது நல்ல விஷயம். enjoyable stuff. பொழுது போக்குக்கான முக்கியமான அம்சம். அதை படங்களிலிருந்து எடுக்க வேண்டும் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? அந்தக் காலம் தொட்டு வரும் பாடல்கள் அவசியமான்னா என்ன அர்த்தம்? அவசியம்கறது என்ன? சினிமாவுக்கே என்ன அவசியம் இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு கதையைக் கொடுப்பதுதான் திரைப்படங்களின் கடமை. அப்படியிருக்கும்போது, பொழுது போக்கில் முக்கிய பங்கு வகிக்கும் music ஐ கொடுத்தால் அதிலென்ன தவறு? என்ன இடிந்து விழுந்து விடப் போகிறது.

எந்த ஆர்ட் பிலிமும் ஓடுவதில்லை. ஜனங்க பார்க்கிறதில்லை. ஏற்கெனவே Parallel Cinema ன்னு கிளம்பி வந்து அது செத்துப் போய் விட்டதே. ஏன் செத்து போகற நிலைமை?

விடாப்பிடியா அந்த Art film makers எல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தாங்க? ஜனங்களுக்கு பிடிக்கிற விஷயங்களை கொடுக்க மறந்ததுதான் காரணம். அதெல்லாம் கொடுத்தால் என்னவோ தங்களோட கற்பையே இழந்து விடுகிற மாதிரி நினைத்தார்கள். இந்தத் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்ததால்தான் Parallel Cinema  வே செத்துப் போச்சு. சினிமா என்பது யாருக்காக? உனக்காக மட்டுமல்ல. உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமல்ல. உன்னுடைய மேல்தட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல. அது வெறும் morning show  ருக்காக மட்டுமல்ல. அதை எல்லாரும் பார்க்க வேண்டும். படிப்பறிவு இன்னும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம். ஜனங்களின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குப் பிடித்தமான சில நல்ல அம்சங்களை திரைப்படங்களில் வைத்துதான் அவர்களை கவரவேண்டும். கவர முடியும். 40 வருஷங்களுக்கு முன்பு வந்த தியாகராஜ பாகவதர் படங்களைப் பார்த்தால் 70 பாட்டுகள் 80 பாட்டுகள் என்றிருக்கும். இன்றைக்கு அப்படியா? ஐந்து பாட்டுகள் தானே இருக்கிறது. ஏவி.எம்.மில் பாட்டே இல்லாம அந்த நாள் எடுத்தாங்க. அவார்டெல்லாம் கிடைத்தாலும் படம் ஓடவில்லை. நானும் ஒரு வீடு இருவாசல் படம் எடுத்துப் பார்த்தேன். அதற்கு மியூசிக் தேவையில்லை. பாடலே வேண்டாம் என்று வறட்டுப் பிடிவாதத்தோடு எடுத்தேன். என்ன ஆனது..? ஜனங்க அதை reject  பண்ணிவிடுவாங்கன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை ஒரு experimental  ஆ எடுத்துப் பார்த்தேனே. அவார்டு கிடைச்சுது. ஆனா படம்தோல்வி அடைஞ்சுது. உடனே Jurassic park ல் Schindler’s list ‘ல் எல்லாம் பாடல்கள் இருந்ததான்னு கேட்கக்கூடாது. அது அர்த்தமில்லாத கேள்வி. அவங்க பாணி வேறு. பாடல்களோடு கலந்து கொடுக்கிற பொழுது போக்கு அம்சங்கள் உள்ள படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. அதுமட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் எனக்கு music பிடிக்கும்.

Master director K Balachander Passed away-Onlookers Mediaஉங்களிடமிருந்து வந்த உதவியாளர்களில் விசு தவிர (அவர் பாணி வேறு) யாருமே உங்களை நினைவுபடுத்துவதில்லையே ஏன்? தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில்லையா?

விசுவைப் பொறுத்தவரை அவர் என்னிடம் உதவியாளரா இருந்ததில்லை. அவர் என் சில படங்களில் கதை வசனகர்த்தாவாக Associate பண்ணியிருக்கார் என்பதைத் தவிர. ஆனா அவர் என்னைத் தன் மானசீக குருவாக நினைச்சிட்டிருக்கார். அதை விட்டுவிடுவோம். இந்தக் கேள்வியே silly யா தோணுது. நான் ஒரு எதிர் கேள்வி கேட்கிறேன். நீங்க ஒரு பத்திரிகையாசிரியரா இருக்கிறீர்கள். உங்களிடம் உங்கள் பத்திரிகையில் வேலை பார்த்த யாருமே உங்களை நினைவுபடுத்துகிற மாதிரி பின்னால் வரவில்லையே ஏன்? நீங்க பத்திரிகைத் தொழிலின் ரகசியங்களைப் பகிர்ந்துக்கலையான்னு கேட்டால் அது எவ்வளவு silly யா இருக்கு? அதே மாதிரித்தான் இதுவும். உங்களிடம் யாராவது வேலை பார்க்கிறாங்கன்னா, sub-Editor ஆ work பண்றாங்கன்னா அவுங்களா கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது இல்லையா? நீங்க ஏதோ எழுதிக் கொடுக்கிறீங்க. எழுதிக் கொடுக்கிறதைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? எந்த மாதிரி நேரத்தில் எப்படி எழுதுறார்னு அவங்களே கற்றுகிட  வேண்டியதுதானே? அவங்களை எதிர்த்தாப்புல உட்கார வைத்து, இங்கே பாரு இந்த இடத்துல என்ன போட்டிருக்கேன் பாரு. அந்த Sentence ஐ எப்படி Compose பண்ணியிருக்கிறேன் பாரு. அந்தக் கட்டுரையை எப்படி ஆரம்பிச்சிருக்கேன் பாருன்னு என்ன வகுப்பா நடத்த முடியும் உதவியாளர்களுக்கு..? நடத்த மாட்டீங்க இல்லையா?  என் கூட Work பண்ற Assistants ஐ கூட வச்சிக்கிட்டுத் தானே படம் எடுக்கிறேன். நான் மட்டும் தனியா இருந்து கொண்டு இருட்டறைக்குள்ளா படம் எடுக்கிறேன்? எல்லாம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்காங்க. டயலாக் எப்படி எழுதியிருக்கேன்னு எழுதிய பின்னாடி பார்க்கலாம் இல்லையா… Dialogue எழுதிய பின்னாடி It is a open book  தானே? அதில் ஒளிவு மறைவு என்ன இருக்கு? ஒரு காட்சியை எப்படி எடுக்கிறார்… அதற்கு எப்படி வசனம் எழுதுகிறார்னு கவனிச்சுக்க வேண்டியது தானே? இந்தப் பாடங்கள் எல்லாம் அவங்களா கத்துக்க வேண்டியதுதான். Especially சினிமாத் தொழில்ல ரகசியமே கிடையாது. இது என்ன மந்திரத்துல மாங்காய் வரவழைக்கிற ரகசியமா, சொல்லிக் கொடுக்காம இருக்கிறதற்கு? தப்பான ஒரு கேள்வி இது. என்கிட்டே உதவியாளர்களா இருந்தவங்க வெளியில அதிகமான அளவில் வரலைங்கறது ஒரு உண்மை. அவ்வளவுதான். That is fact. எப்படி முன்னேறிக் கொள்ள வேண்டும். எப்படி தங்களைத் தாங்களே வளர்த்துக்க வேண்டும் என்கிறதெல்லாம் அவரவர்களின் ஈடுபாட்டை பொறுத்தது. மணிரத்னம் இவ்வளவு பெரிய டைரக்டர் – அவர் யாரிடம் உதவி இயக்குநராக  இருந்தார்? ஏன்… நான் யாரிடம் உதவி இயக்குநராக இருந்தேன்?

திரை இயக்கத்தைப் பொறுத்தவரை நான் ஒரு மாணவன் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஒன்றா இரண்டா… எல்லாவற்றையும்தான். ஒரு மாணவன் Pass பண்ணிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் தெரிந்து கொண்டான் என்று அர்த்தம். ஆனா மாணவனா இருக்கிறவன் fail ஆகிவிட்டான் என்றால் மறுபடியும் பரீட்சை எழுதித்தானே ஆகவேண்டும்? என் ஒரு படம் வெற்றி பெறுகிறது. தொடர்ந்து மூன்று படங்கள் வெற்று பெறுகின்றன. நான்காவது படம் தோல்வி அடைகிறது. ஐந்தாவது படத்தை வெற்றி படமாக்க நினைக்கிறேன் என்றால் மறுபடியும் நான் பரீட்சை எழுதித்தானே ஆக வேண்டும். அதனால்தான் என்னை நான் மாணவனாக நினைக்கிறேன்.

யாரையாவது பார்த்துப் பொறாமைப்பட்டிருக்கிறீர்களா?

ஏன் பொறாமைப்படவில்லை? ஏன்… இல்லை. அதாவது பாராட்டுவதும் சரி பொறாமைப்படுவதும் சரி,,, அதுதான் பாலசந்தரின் asset. அதுதான் அவரது Technique. அதுதான் அவரிடம் உள்ள நல்ல குணம் என்று நான் நினைக்கிறேன். It is my strong point . பாரதிராஜாவை பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். அதே நேரம் பாராட்டியும் இருக்கிறேன். அதே மாதிரி மணிரத்னத்தையும் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். பாராட்டி இருக்கிறேன். பொறாமைப்படுவதும் பாராட்டுவதும் ஒரு கலைஞனுக்கு அவசியம். especially ஒரு டைரக்டருக்கு அவசியம். அப்போதுதான் வளர முடியும். சில நாட்களுக்கு முன் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு இந்தி டைரக்டர் மகேஷ்பட் ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். முன்னர் அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் அவரை எனக்குப் பிடிக்கும். நானே அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் படங்கள் எல்லாம் எனக்குப்பிடிக்கும். நான் உங்கள் ரசிகன்னு கூட வைத்துக் கொள்ளலாம் என்றேன். உடனே அவரும் அதையே சொன்னார். நான் உங்களுடைய ரசிகன் சார்.I have seen all your Tamil films என்றார். பொறாமையை மனசுக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். அதை தொழிலில் காட்ட வேண்டும். ஆனால் பாராட்டை மனம் திறந்து வெளிப்படுத்த வேண்டும்.

Master director K Balachander Passed away-Onlookers Mediaநீங்கள் ஏன் வெளியார் படங்களை இயக்குவதைத் தவிர்க்கிறீர்கள் except சில படங்கள்..?

என் கூடவே வந்தவர்களுக்கு ஆரம்ப காலத்தில் படம் பண்ணிக் கொடுத்து வந்தேன். அப்படி பண்ணும்போது ஒரு லாபம். நான் கொஞ்சம் experimental ஆ படம் பண்ணும் Opportunity எனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற ஒரே anxiety யிலேயே நம்முடைய கதை அமைப்பு போன்றவை இருந்துவிடும் என்று, தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு மட்டும் செய்து கொடுத்து வந்தேன். சொந்தமா திரைப்படக் கம்பெனி ஆரம்பித்த பிறகு லாபமோ நஷ்டமோ அது நம்மோடு போகட்டும், experimental ஆ எது செய்தாலும் நம்மோடு போகட்டும், அதனால மற்றவர்கள் பாதிக்கக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான் வெளியார் படங்களை ஆரம்பத்திலிருந்தே தவிர்த்து வந்திருக்கிறேன்.

திரைக்கதை அமைப்பில் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசம் காட்டி வரும் நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

சில கதைகளை எடுத்துக் கொண்டு – இதை ஜனங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை digest பண்ண முடியவில்லை என்று வரும்போது இதுமாதிரி heavy subject  ஐ நாம எடுக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரை பாணி என்று எதுவும் கிடையாது. எந்தக் கதைக்கு எப்படிப்பட்ட பாணி வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று நம்புகிறவன் நான். படவெற்றிக்கு திரைக்கதை அமைப்பு முக்கியம் என்று உணர்ந்திருப்பதால் அது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த வித்தியாசத்திற்கு சில கதைகள் தான் இடம் கொடுக்கும் என்பது கொஞ்சம் handicap ஆக இருக்கும் விஷயம்.

kb-bk1டி.வி.யிலும் ஒரு புயலைக் கிளப்பினீர்கள். ஏன் தொடரவில்லை?

டி.வி. ஒரு exciting medium தான். டி.வி.க்காக programme பண்ணும்போது நாம கையைச் சுட்டுக்காம experimental ஆக சில subject ஐ பண்ணுகிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரெண்டு விஷயத்தினால டி.வி. கஷ்டமா இருக்கு. ஒன்று டி.வி. சட்ட திட்டங்களுக்குக் கை கட்டி நிற்க வேண்டிய சூழ்நிலை. ரெண்டு அவங்க பட்ஜெட்டுக்குள்ள எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அதே நேரத்தில் சினிமா எடுத்துப் பழக்கப்பட்டுப் போன நமக்கு அந்த பட்ஜெட்டுக்குள்ள எடுத்துப் பழக்கப்படாதது கொஞ்சம் சிரமமா இருக்கு. அதனால அவங்க பட்ஜெட்டுக்குள் restrict பண்ணி எடுத்தா நமக்கு இருக்கிற expectation க்கு எதிரிடையான result ஐ ஆறுமாதம் கழித்துத்தான் உணர முடியுது. ஆனால் டிவி.யில நம்ம Creative Project ன் result ஐ ஒரு பதினைந்து நாளுக்குள்ளேயே தெரிஞ்சுக்க முடியுது. அது ஒரு சந்தோஷம். Ecstasy அதனால் இந்த டி.வி. மீடியத்தைத் தொடரணும்னு ஆசைதான். பார்க்கலாம். அதற்கேற்றபடி திரையுலகத்திலிருந்து நேரம் கிடைக்கிற போதுதான் அது நிறைவேறும். சன் டி.வி. ஆரம்பிச்ச புதிதில் அவங்களுக்காக பாலசந்தரின் சின்னதிரைன்னு 13 அரைமணி நேர Programme கொடுத்திருந்தேன். அதை 13 எபிசோடா எட்டு கதைகளை வைத்துப் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பண்ணும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நல்ல கதை. நல்ல Project ஆனால் அந்த பட்ஜெட்டுக்குள்ளே அதை Contain பண்ண முடியாமல் – படத்திலிருந்துதான் கையைச் சுட்டுக்கிட்டேன். நான் ஒப்புக் கொண்ட தொகைக்கு மேல் செலவாய்ட்டுதுன்னு டிவிகாரங்ககிட்டே கேட்க முடியாத நிலையில் ஓசைப்படாம நஷ்டத்தை நான் ஏத்துக்கிட்டேன்.

ஆரம்பத்தில் குமார், அப்புறம் எம்.எஸ்.விஸ்வநாதன், எனத் தொடர்ந்த நீங்கள் இசையமைப்பாளர்கள் விஷயத்தில் இப்போது அடிக்கடி மாற்றம் செய்கிறீர்களே ஏன்?

இசை அமைப்பாளர் என்பது திரைப்படத்தைப் பொறுத்தவரை இன்னொரு Technician. எத்தனையோ நடிகர் – நடிகர்களை வைத்துப் படம் எடுக்கிறோம். கமலை வைத்து எடுக்கிறோம். ரஜினியை வைத்து எடுக்கிறோம். அதேமாதிரி இன்னொரு இசையமைப்பாளரை வைத்துப் படமெடுக்கும்போது – அடுத்த படம் வரும்போது இன்னொரு இசையமைப்பாளரை வைத்துப் படமெடுக்கலாம்னு நினைக்க ஒரு இயக்குநருக்கோ – தயாரிப்பாளருக்கோ உரிமை இருக்கு. அதுமட்டுமல்ல இந்த subject க்கு இந்த மியூசிக் டைரக்டர் இசை அமைச்சா நல்லா வரும்னு தோணும். இல்லையா? சிலபேருடன் rapport ஜாஸ்தி இருக்கிறதால் அவருடன் தொடர்ந்து செய்யலாம். ஆனாலும் subject மாறும்போது அதுக்கேத்த மியூசிக் டைரக்டரை வைத்து பண்ணுவதில் என்ன தவறு? அதுமட்டுமல்ல ஒரு டைரக்டருக்கு கேரமாமேன் தான் ரொம்ப முக்கியம். Because the director sees the entire subject through the cameraman. அதனால் கேரமாமேனுக்கும் டைரக்டருக்கும் உள்ள rapport முக்கியம். டைரக்டர் என்ன நினைக்கிறார் என்பது கேமராமேனுக்குத் தெரியணும். ஒரு கேமராமேன் எப்படியெல்லாம் அதைப் பண்ண முடியும்னு அந்த டைரக்டருக்குத் தெரிஞ்சிருக்கணும். ஆனால் இசையைப் பொறுத்தவரை இந்த subject க்கு இவர் வேணும்னு நினைக்கிற உரிமை டைரக்டருக்கு உண்டு. அந்த முறையில் தான் நான் பல மியூசிக் டைரக்டர்களிடமெல்லாம் ஓர்க் பண்ணியிருக்கேன். இதற்கு உள் நோக்கமெல்லாம் கற்பிச்சால் அதற்கு நான் பொறுப்பில்லை.

என் ஆரம்ப காலத்தில் குமார் இசையமைக்கிறார். அதை அடுத்து எம்.எஸ்.வி. என் நிறைய படங்களுக்கு பண்ணியிருக்கிறார் எம்.எஸ்.வி.யை வைத்து  நிறைய success கொடுத்திருக்கிறேன். அதேமாதிரி இளையராஜா. என் படங்களில் இளையராஜாவின் பங்கும் இளையராஜாவின் இசையில் என் படங்களின் பங்கெல்லாம்… உங்களுக்கு தெரிந்தவைதான். இப்ப ரஹ்மான்கறவரை அறிமுகப்படுத்துற வாய்ப்பு மணிரத்னம் மூலம் ரோஜா படத்தில் கிடைச்சது. நான் அறிமுகப்படுத்திய வாய்ப்பு இன்று எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நான் சொல்லவே வேண்டாம். இன்று தமிழர்களால் பேசப்படும் இசையமைப்பாளரா ரஹ்மான் இருக்கிறார். சப்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி எந்த டைரக்டருக்கும் மியூசிக் டைரக்டரை மாற்றிக் கொள்கிற உரிமை உண்டு என்பதுதான் என் கருத்து.

Master director K Balachander Passed away-Onlookers Mediaநாகேஷின் பல முகங்களைக் காட்டியவர் நீங்கள், நகைச்சுவை நடிகர்களான செந்தில், கவுண்டமணியை மட்டும் இன்னமும் பிடிவாதமாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களே ஏன்?

ஐயா… நீங்களே இப்படி கேள்வி கேட்கிறீர்கள். கொஞ்ச நேரத்திற்கு முன் பாலசந்தர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்ததில்லை. இப்போது நட்சத்திர துணை தேடுவது ஏன்னு கேள்வி கேட்டதும் நீங்கள்தான். நடிகரோ நடிகையோ யார் எப்படிப்பட்ட படத்திற்கு தேவை என்று தீர்மானிப்பது உங்களுடைய உரிமையோ என்னுடைய உரிமையோ அல்ல… ஒரு கதை அந்தக் கதையில் அமைகிற கேரக்டருக்குப் பொருத்தமாக யாரைப் போடலாம் என்று தான் பார்க்கவேண்டும். அதனால் இந்தக் கேள்வியே mischievous  ஆ தெரிகிறது. கவுண்டமணி, செந்திலுக்கும் எனக்கும் எந்தவித தகராறும் கிடையாது. அவங்க மேலே எனக்கு நல்ல respect  உண்டு. அதேமாதிரி அவங்களுக்கும் என் மேல respect உண்டு.  ஆனால் இந்தக் கேள்வியில் பாதி பகுதி rediment ஆகிப் போவுது. ஏன்னா செந்தில் அவர்கள் என் டூயட் படத்தில் நடிக்கிறார்.

நாகேஷை யார் கூடவும் இப்படி compare பண்ணக்கூடாது. ஏன்னா நாகேஷ் கூடவே வளர்ந்தவன் நான். என் கூடவே வளர்ந்தவன் நாகேஷ். நான் பலமுறை சொல்லியிருக்கேன். நாகேஷ் என் வழியா think  பண்றவன். நான் நாகேஷ் வழியா act பண்றேன்னு. அப்படிப்பட்ட முறையில் நாகேஷுக்கும் எனக்கும் மேடை நாடகத்திலிருந்து நல்ல rapport இருந்தால் அவருடைய பல பரிமாணங்களை திரைப்படத்தின் மூலம் காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று ‘எதிரொலி’யில் அப்பா இன்று ‘டூயட்’டில் மகன். என்ன சொல்கிறது generation gap ?

 சின்னவனாக இருந்த என்னை பாலுன்னு அன்பா கூப்பிட்டு பணிபுரிந்த அந்த தந்தையின் பாணி. சார்னு பயங்கலந்த மரியாதையுடன் அழைத்துப் பணிபுரியும் மகன். இதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் generation gap ஆ தோணுது. சிவாஜி சார்கிட்டே…. வசனத்தோட  modulation  ஐ சொல்லிக் கொடுக்கவே எனக்கு பயமா இருக்கும். ஒரே ஒருமுறை வசனத்தைப் படித்துக் காட்டுவேன். அவ்வளவுதான். ஆனா மகன் கூட work பண்ணும் போது எந்தவித பயமோ கூச்சமோ இல்லைன்னாலும் எப்படி வசனத்தைச் சொல்லணும்னு ஒருமுறைக்கு இரண்டு முறை படிச்சுக் காட்டுவேன். அன்னைக்கு எந்த விதத்திலும் சிவாஜி சார் குறுக்கிட்டதோ தலையிட்டதோ இல்லைன்னாலும் இப்படி பண்ணினால் நல்லா இருக்கும் பாலுன்னு என்கிட்டே உரிமையோடு சொல்வார். இப்படி பண்ணினா நல்லா இருக்கும்னு மகன்கிட்டே நான் சொல்ற உரிமையும் அனுபவமும் வயதும் எனக்கு இருக்கு. என் படத்தில் என் இயக்கத்தில் நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறார் பிரபு. அவரை வைத்துப் படம் பண்ணணும்னு எனக்கும் உள்ளூர ஆசை இருந்தது. எங்க இருவருடைய ஆசைக்கும் ஒரு வடிகால் தான் ‘டூயட்’.

நாடகத்துறையில் தாங்கள் காட்டிய புதுமையை மறந்து விட முடியாது. நலிந்து கிடக்கும் அந்தந்தத் துறைக்கு புதிய ஊக்கம் கொடுக்கும் எண்ணம் உண்டா?

எப்போதாவது ஒரு நாடகத்தைப் பார்க்கும்போது… அடடா நாடகத்தை விட்டு வந்துட்டோமே. திருப்பியும் எப்போ நாடகத்தை எழுதப் போறோம்… திரும்பியும் எப்போ மேடையேற்றப் போறோம்னு தோணும். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் நம்ம தொழில், நம்முடைய சினிமா, நம்முடைய responsibilities என்னைப் பற்றிய expectations என்னை நம்பியிருப்போருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இதெல்லாம் வந்துவிடுவதால் நாடகத்தை எழுதணும்கிற ஆசை உள்ளுக்குள்ள மறைஞ்சு கிடந்தாலும் அதைச் செயல்படுத்துகிற opportunity இல்லாமல் போய் விடுகிறது. நிச்சயமாக கொஞ்சம் பெரிய ஓய்வு கிடைக்கிறபோது ஒரு நல்ல நாடகத்தை தயார் பண்ணணும். அதற்கான நேரங்காலம் அமைகிறபோது நிச்சயமா நான் செய்தே தீருவேன்.

Master director K Balachander Passed away-Onlookers Mediaஎந்த நட்சத்திரத்தையாவது மனதில் வைத்துக் கதை எழுதியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விக்கு பதில் முன்பே சொல்லியிருக்கிறேன். உதாரணமா ‘மரோசரித்ரா’ படம் எடுத்தபோது கமல்ஹாசனை முதன்முதலா தெலுங்கில அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். அறிமுகப்படுத்த நினைத்தபோது தெலுங்குப் படங்கள் தயாரிச்சுக்கிட்டிருந்த அரங்கண்ணல் கிட்டே சொன்னேன். கமலஹாசன் நல்ல Performing Artist  அவரை தமிழில் அறிமுகப்படுத்தின மாதிரி தெலுங்கிலேயும் பண்ணணும் சொன்னபோது, அந்த வாய்ப்பு வந்தது. அப்போ கமலஹாசனுக்காகத்தான் கதை பண்ண வேண்டியிருந்தது. கமலஹாசன் எப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கலைஞன். நல்ல டான்சர், நல்ல நடிகன், நல்ல திறமைசாலி, புத்திசாலி இத்தனையும் மனசிலே வைத்து எழுதியதால்தான் அந்தப் படம் சக்சஸ் ஆச்சு.

‘டூயட்’டில அறிவிக்கப்பட்ட குஷ்பூவுக்கு பதில் மீனாட்சி சேஷாத்ரி, ‘அண்ணாமலை’யில் வசந்துக்குப் பதில் சுரேஷ் கிருஷ்ணா… ஏன் இந்த ஷாக் ட்ரீட்மெண்ட்?

இதுல ஷாக் ட்ரீட்மெண்ட்டும் இல்லை. ஒரு புண்ணாக்குமில்லை. நீங்க பத்திரிகையாசிரியரா இருக்கிறதலா நீங்களா புதுப்புது வார்த்தைகளை create பண்ணிக்கிறீங்க. அதாவது சில சில  மாற்றங்களை தவிர்க்க முடியாது. ஒரு படத்தில் யாரைப் போடலாம்கறது பேச்சுவார்த்தை நிலையில் இருக்கிறபோதே பத்திரிகையில் பிரபலமாகி விடுவது உண்மை. அதற்குப் பிறகு யாரைப் போடுவது என்று முடிவு செய்கிறோம். பேசிக்கொண்டே இருக்கும்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பாக முடியாது. காலத்தின் கட்டாயத்தால் மாற்றிக்கொள்ள நேரும்போது அது Compromise ஆகிவிட முடியாது.

தொகுப்பு: ஆர்.கே. அருள்செல்வன்

நன்றி : பிலிமாலயா 1994