பாவனா விவகாரம் : தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை!

ponvannan1இக்காலத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
சமீபத்தில் சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம்  குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும்  சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக  மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது  மிகவும் வருத்தமாக உள்ளது.
நேற்றைக்கு முன்தினம் இரவு படபிடிப்பு முடித்து தன்னுடைய காரில் பயணம் செய்த போது ஓட்டுநரின் உதவியுடன் திடீரென இரண்டு, மூன்று நபர்கள் பாவனா அவர்களை கடத்தி சென்று பலவந்த படுத்தியதாக செய்தி வந்தது. நேற்று காலையில் நாங்கள் ஊடகங்கள் மூலமாக செய்தி கிடைத்தவுடன் இது உண்மையானதாக இருக்க கூடாது என்று தான் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பின்பு உடனடியாக மலையாள நடிகர்  சங்கம் ஈடவேல பாபு அவர்களை தொடர்புகொண்டு நாங்கள் கேள்விப்பட்டு அறிந்த இந்த விஷயம் உண்மைதானா என்று பதற்றத்துடன் கேட்டோம் அதற்கு அவர் உண்மைதான் என்று கூறினார்.
நேற்று இரவே போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று அதன் விசாரணை தொடங்கிவிடும் நாம் சிறிது நேரம் காத்திருப்போம் என்று கூறினார். நேற்று மாலை வரை அவர்களை தொடர்புகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை அறிந்து வந்தோம். பின்பு உடனடியாக கேரளா முதலமைச்சர் அவர்களுக்கும், காவல்துறைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுதிருந்தோம்.
நேற்று மதியம் 3 மணியளவில் பாவனாவிடம் சிறிய விசாரணை நடந்தது அந்த விசாரணையின் முடிவுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக மூன்று நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்  மேலும் அந்த பெண்ணின் ஓட்டுனர் கைது செய்யப் படுவார்.
எங்களின் வேண்டுகோள் அந்த பெண்ணைக் கடத்தியது பணத்திற்காகவா அல்லது முன்விரோதம் காரணமாகவா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா ?? கைதானவர்கள் இந்த பின்னணியில்  மட்டும்தான் உள்ளார்களா அல்லது வேறு யாரும் உள்ளார்களா என்றும் அப்படி வேறு யாராவது இருந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிக பெயரிய அளவில் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.
பின்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,  இன்று தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளது. மேலும் நாம் பயணம் செய்யும் போது நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நடிகர், நடிகைகள் படபிடிப்பு முடிந்து  திரும்பும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டிய  சூழ்நிலை உள்ளது. டிரைவரின் உதவியுடன் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் முடியும்.
ponvnஒரு பயணத்திற்கு நாம் காரை வாடகைக்கு வாங்கும் போது அந்த டிரைவரின் அனைத்து பின்னணியும் அறிந்து கொள்ளவேண்டும். பெரியவர்கள் இந்த பாதுகாப்பு சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட முடியும் ஆனால் அதே சமயத்தில் சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ??  சமீபத்தில்  எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்காரம்    செய்து கொலை செய்துள்ளனர் என்ற செய்தி வந்தது நாம் எண்ணி பார்க்கவேண்டிய விஷயம் நாம் வெறும் 30% மட்டும் படிப்பறிவு கொண்டு இருந்த போது இருந்த பெண்களுக்கான பாதுகாப்பு இன்று 80% படிப்பறிவு கொண்டு  இருக்கும் போது இல்லை என்று எண்ணும் போது  வருத்தமாக உள்ளது. ஆனால் அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இளம்பெண்களும், இளைஞர்களும் இரவோடு இரவாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட இரண்டு வகையில் நம் ச மூகம் செயல்படுகிறது. இதற்கு காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்,
உடன் இருந்தவர்கள்
செயற்குழு உறுப்பினர்கள்
1.குட்டிபத்மினி
2.ஜூனியர் பாலையா
3.சோனியா
4.நிரோஷா
5.விக்னேஷ்
6.பிரேம்குமார்
7.உதயா
நியமன செயற்குழு உறுப்பினர்கள்
1.மனோபாலா
2.சரவணன்
3.ஹேமசந்தரன்
4.லலிதா குமாரி
5.மருது பாண்டி
6.காஜா மொய்தீன்
மற்றும் நடிகை லிஸ்ஸி