பிரஷாந்தின் சாஹசம் பட இசை வெளியீட்டு விழா!

sahasam-hn2பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பிரஷாந்தின் “சாஹசம்” படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று காலை சூரியன் FM-ல் நடைபெற்றது. சாஹசம் படத்தின் மிகப்பெரிய பலமாகவும் ஸ்பெஷலாகவும் கருதப்படுவது பாடல்களும் அதனை படமாக்கிய விதமும்தான்.

தமன் இசையில் இளமை துள்ளும் பாடல்களை சிம்பு, அனிருத், லட்சுமி மேனன் ஆகிய திரை நட்சத்திரங்களும், இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களான மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் விஜய் பிரகாஷின் குரலில் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சாஹசம் படத்தின் 6 பாடல்களும் இப்படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜனுக்கு மிகவும் பிடித்துப்போக இசையமைப்பாளர் தமனுக்கு காஸ்ட்லியான டயோட்டா பார்சூனர் காரை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அந்தளவுக்கு பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளன.
சாஹசம் படத்தின் கலர்ஃபுல் பாடல் காட்சிகள் 20 நாட்கள் தொடர்ந்து மலேசியா மற்றும் ஜப்பானில் படமாக்கப்பட்டன.

பிரஷாந்துடன் இந்தியாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மலேசிய நடன கலைஞர்கள் சேர்ந்து ஆடிய ”சாயாங்கு”என்ற பாடல் மட்டும் மலேசியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திராத விசேஷமான இடங்களில் தொடர்ந்து 10 நாட்கள் படமாக்கியுள்ளார்கள்.
மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த சாயாங்கு எனும் பாடலை சமீபத்தில் மலேசியாவில் ரசிகர்களுடன் இணைந்து சிங்கிள் டிராக்காக பிரஷாந்த்  வெளியிட்டார் அப்போது மேடையில் ரசிகர்களுடன் பிரஷாந்த் சாயாங்கு பாடலுக்காக நடனமாடினார், சாயாங்கு என்றால் மலேசிய மொழியில் “அன்பே ஆருயிரே” என்று அர்த்தம். தற்போது மலேசியா முழுவதும் எங்கு திரும்பினாலும் சாயாங்கு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இசைப் பிரியர்களுக்கு அமுதமாய் அமையவுள்ள சாஹசம் படத்தின் பாடல்கள் எதிர்ப்பார்ப்புகளை ஈடு செய்யும் என்று தியாகராஜன் பெருமிதத்தோடு கூறினார்.
பிரஷாந்துடன் இணைந்து இப்படத்தில் பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி மற்றும் 50க்கும் மேற்பட்ட ரஷ்ய நடன பெண்களுடன் சென்னையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மிகப்பிரம்மாண்டமான செட்டில் 10 நாட்கள் நடன இயக்குநர் ராஜுசுந்தரம் இப்பாடலை படமாக்கினார்.
இசை மட்டுமல்லாமல் படத்தின் இன்னுமொரு மிகப்பெரிய பலம் பிரஷாந்த் நடத்தும் சாஹச விளையாட்டுகள். பிரஷாந்த் வில்லன்களோடு மோதும் மயிர் கூச்செரியும் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கியுள்ளார். ஆபத்தான சண்டைக்காட்சிகளில்கூட பிரஷாந்த் டூப் இல்லாமல் நடித்தது பாராட்டுக்குரிய விஷயம்.
இப்படத்தின் மூலம் ஆஸ்திரேலிய அழகி அமண்டா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

நடனத்தில் கைத்தேர்ந்த அமண்டா நடிப்பிலும் அவரது திறமையை காட்டியுள்ளார்.

சாஹசம் படத்தில் பிரஷாந்த், அமண்டா, நர்கிஸ் பக்ரியுடன் இணைந்து நாசர், தம்பி ராமைய்யா, சோனு சூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, லீமாபாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமிநாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய் பிரஷாந்த், ஹேமா,  ராவ் ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ் கான், கிருஷ்ண வம்சி, மிப்பு, ஹலோ FM சுரேஷ், ராஜேந்திரநாத், என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
கலை- மிலன், எடிட்டிங்- ஜாஷிஉமர், சண்டைபயிற்சி- கனல்கண்ணன்,
ஸ்டில்ஸ் – கண்ணன், நடனம்- ராஜுசுந்தரம், பாபாபாஸ்கர், காயத்ரிரகுராம், சாண்டி. ஒளிப்பதிவு:- ஷாஜிகுமார்.
தயாரிப்புநிர்வாகம்:- கே.ஆனந்த் மற்றும் K.சக்திவேல்,

அருண்ராஜ் வர்மா சாஹசம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இசை- தமன், பாடல்கள்- மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன்,
திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் சாஹசம் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.

மிக விரைவில் வெளிவரவுள்ள சாஹசம் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையுமா?ஒரு திருப்பு முனை வெற்றிக்காக காத்திருக்கிறார் பிரஷாந்த் என எதிர்ப்பார்க்கலாம்.