‘பிருந்தாவனம்’ விமர்சனம்

brindavan1ராதாமோகன், இயக்கத்தில்அருள்நிதி விவேக்  ,தான்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பிருந்தாவனம்’.

காது கேளாத, வாய் பேச முடியாதவரான நாயகன் அருள்நிதி, நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர்  காது கேட்கவில்லை என்றாலும், விவேக்கின் காமெடி காட்சிகளை ரசித்து பார்க்கும் அருள் நிதி, ஊட்டியில் விவேக்கை சந்திப்பதுடன், அவருக்கு ஒரு உதவியை செய்ய, அதில் இருந்து இருவரும் நண்பர்களாகப் பழகுகிறார்கள். இதற்கிடையில், அருள்நிதியின் நிலை தெரிந்தாலும், அவரை நாயகி தான்யா காதலிக்கிறார். ஆனால், அருள்நிதி அவரது காதலை நிராகரிக்க, அதற்கான காரணத்தை அறிய விவேக் இறங்கும் போது, அருள்நிதிக்கு பேசும் திறன் உள்ளது என்கிற உண்மை தெரிய வருகிறது. பிறகு அருள் நிதி ஊமையாக நடிப்பதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ளும் விவேக், தான்யாவின் காதலை நிராகரிப்பதற்கான காரணத்தையும் அறிகிறார். அருள்நிதியின் காதல் கை கூடியதா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

brinadavanam2அவசரம் காட்டாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அருள்நிதி, இந்த படத்திலும்  அப்படியே செய்து அசத்தியிருக்கிறார். படம் முழுவதும் வசனமே பேசாமல், அவர் செய்யும் ரியாக்‌ஷன்களுக்கே பாராட்டு கொடுக்கலாம். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் இன்றி, ரசிகர்கள் ரசிக்கும்படியாக நடிப்பது என்பது, சவாலானது என்றாலும், அந்தச் சவாலை ரொம்ப அனாயாசமாக எதிர் கொண்டிருக்கிறார் அருள்நிதி.

நடிகர் விவேக் கதாபாத்திரமாகவே நடித்துள்ள விவேக்கின் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமான படம் என்று சொல்ல்லாம்.  இப்படத்தின் மற்றொரு நாயகனாகவே விவேக் வலம் வருகிறார். அருள்நிதி மாற்றுத்திறனாளி என்று தெரிந்தாலும், அவரது பாணியிலேயே நடு நடுவே அவரை விவேக் கலாய்த்து தன்னை மீண்டும் சிந்திக்க வைக்கும் காமெடி நடிகர் என்று நிரூபித்துள்ளார். இதில்  குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

பெரிய அளவில் காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லை என்றாலும், தான்யா, ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார். அருள்நிதியை விரட்டி விரட்டி காதலிக்கும் அவர் , அருள்நிதியிடம் நான் அழகா இருக்கேனா சொல்லு எனக்கேட்டு  செய்யும் அடாவடித்தனம் ரசிக்க வைக்கிறது.

கதை இல்லை, பரபரப்பான சேஸிங் காட்சிகள் இல்லை, காட்சிக்கு காட்சி ட்விஸ்டுகள் இல்லை. ஆனாலும், படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ரசிகர்களை கட்டிப்போடுகிறது.

விஷால் சந்திரசேகரின் இசை, திரைக்கதைக்கு ஏற்ப நம்மை வருடிச் செல்கிறது. என்,எஸ்.விவேகானந்தனின் ஒளிப்பதிவில் ஊட்டியின் பியூட்டி மட்டுமல்ல, நடிகர்களின் பியூட்டியும் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் கஷ்ட்டம் என்பது அனைவருக்கும் வரும், அதை சாதாரணமாக நினைத்து கடந்து போக வேண்டும், என்பதை ரொம்ப இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் ராதாமோகன், கோடை வெப்பத்தில் நமக்கு ஒருகுளிர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
இருபது நிமிடம் முன்பே முடிந்த கதையை கடைசியில்  விரைவாக முடிக்க ஏன் இவ்வளவு அலுப்பு காட்டுகிறார்?

இயக்குநர் ராதாமோகன், தனது படங்களில் இயக்குநர் ஆளுமையை காட்டுவதுடன், படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும், வசனம் எழுதுபவர்களுக்கும் வெளிக்காட்டுவதற்கான பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுப்பார். அப்படித்தான் இதிலும் தந்துள்ளார். அவ்வகையில் வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கவனம் கவர்கிறார்.
பொழுதுபோக்கான படமாக மட்டுமல்லாமல், நமது கவலைகளையும் மறக்கச் செய்யும்    இந்த ‘பிருந்தாவனம்’ .