புதுமுகங்கள் நடிக்கும் ‘ வெள்ள காக்கா மஞ்ச குருவி ‘

ve-kakka222எம்.குப்பன்  வழங்க குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வெள்ள காக்கா மஞ்ச குருவி”என்று பெயரிட்டுள்ளனர்.      இந்த படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது.

கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுகிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷீ இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு  –  பவ.விஜய்   ,    இசை   –  ஜி.சாய்தர்ஷன்

தயாரிப்பு   –  என்..சாய்பாபா, ஜி.ஹரிபாபு, எஸ்.கே.முரளீதரன், கே.பிரசாத்

இணை தயாரிப்பு  –  பாஸ்மணிவண்ணன்

“ வெள்ள காக்கா மஞ்ச குருவி” (அடடா  ! தலைப்பே கண்ண கட்டுதே..  !) எழுதி இயக்குபவர் எஸ்.கே..முரளீதரன்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.கே.முரலீதரனிடம் கேட்டோம்… ” கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். (அட …!)அப்படிப்பட்டவனுக்கு பணக்கார பெண் ஒருத்தி மீது காதல் வருகிறது.(அட டா…!) அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.( அச்சச்சோ…பாவம்..)

பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாய சம்பந்தப்பட்ட பிரச்னை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ( அட இதப் பார்றா…!) ஊரே மெச்சுகிறது. அவனது காதல் ஜெயித்ததா? என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம்” என்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இருக்கு ”என்றார்.

(சொல்லுங்கப்பா சொல்லுங்க .நாங்க இதையும் தாங்குவோம் இதுக்கும் மேலயும் தாங்குவோம்.! )

படப்பிடிப்பு  சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.