புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி !

terasa1ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம் .

அந்த அன்னை தெரசாவுக்கு இந்து . இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்து மதத்தின் சார்பில்  இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
இஸ்லாம் மதத்தின் சார்பில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி . கிறிஸ்தவ மதத்தின் சார்பில் மயிலாப்பூர் மறைமாவட்ட அருட்தந்தை  அந்தோணிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புனித அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தி பெருமை சேர்த்தனர்.

நிகழ்ச்சியில்,  சேவியர் அல்ஃபோன்ஸ் எழுதிய அன்னை தெரசா பற்றிய ‘ The Spring returns not’  என்கிற ஆங்கில நூல் வெளியிடப் பட் டது.இது அன்னை தெரசாவின் வாழ்வும் வாக்கும் பற்றிய நூலாகும். இந்நூலுக்கு வசந்தம் திரும்புவதில்லை எனப் பொருள்படும் படி ‘The Spring returns not  ‘ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இது அன்னையின் ஆன்மாவும் அது சொல்லும் செய்தியும் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலாகும்.

அன்னையைப்பற்றி சேவியர் அல்ஃபோன்ஸ் மற்றும் ஜேம்ஸ் மெல்க்கியோர்  தமிழில் எழுதிய  ‘ஏழைகளின் அன்னை தெரசா ‘ என்கிற நூலும் வெளியிடப்பட்டது. நூல்களை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

terasa14இந்நிகழ்வில் மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அன்னை தெரசாவைக்  கௌரவப்படுத்துவதன் மூலம் நாம் பெருமை கொள்கிறோம்.என்றும் அவரது  புனித தியாக வாழ்வைப் பற்றியும்  எடுத்துரைத்தனர்.ஏழைகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த சேவையைப் புகழ்ந்துரைத்தனர்.அன்னை தெரசா மதங்கள், தேசங்களின் எல்லைகளைக் கடந்தவர் எனவும் கூறினர்.

இந்த எளிய விழாவில் பிரிட்டோ கல்விக்குழுமங்களின் நிறுவனர்,முதல்வர் சேவியர் பிரிட்டோ,டாக்டர் தயாளன்,சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக மதுரை மாகாண ஏசுசபையைச் சேர்ந்த சே.ச. சேவியர் அல்ஃபோன்ஸ் நன்றி கூறினார்.