பெண் கொடுமைகள் அதிகரிக்க சினிமாக்கள் காரணமா: காயத்ரி ரகுராம்

lqif.gayathri11தமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கான படங்கள் ஒரு சிலதான் அந்த வகையில் திரைபடத் துறையில் பணியாற்றும் நடனக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சில உண்மைச் சம்பவங்களை வைத்து விரைவில் வெளிவரக் காத்திருக்கும் படம்தான் ‘யாதுமாகி நின்றாய்’.

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம்  முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும் படம் இதுவாகும்.இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து காயத்ரி ரகுராம் பேசுகையில் ”இப்படம் திரைத்துறையில் பணியாற்றும் நடனக் கலைஞர்களின் சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது .இப்படம் பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்ற ஒரு சமூகக்கருத்தை கூறும் வகையில் இப்படம் உள்ளது.

சினிமாக்கள் மீடியாக்களால்தான் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இது உண்மையல்ல.

குறைந்த செலவில் 25 நாட்களில் பெண்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது இல்லை.இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள், இதில் புடவை நிலவே என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். மேலும் இது என் அப்பாவின் கனவாகும்,அதை தவிர இப்படத்தை என் குருநாதர் இயக்குநர் திரு ஏ.எல்..விஜய் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.” என்று கூறினார்.

yadhumagi1gpவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடன இயக்குநர் கலா மாஸ்டர்

” சினிமாவில் பெண்களுக்கான படங்கள் குறைவாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படம் பெண்களுக்கு பெருமையை சேர்க்கும் . தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண்குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை  நாமே பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம், இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இப்படம் பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும். ” என்றார்.