பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி முக்கியமல்ல: ராதாரவி

radharavi1ஆங்கிலபடம் இசை வெளியீட்டு விழா 

குமரேஷ் குமார் இயக்கத்தில் ஆர்ஜே மீடியா கிரியேஷன் சார்பில் ராம்கி நடிக்கும் திரைப்படம் ஆங்கிலப்படம். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேப்-ல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள்  ராதாரவி,பவர் ஸ்டார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் கலந்துகொண்டனர். அவர்கள் திரைப்படத்தையும், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தி பேசினர் .அவை பின்வருமாறு:
 
ராதாரவி பேசுகையில்,

பெரிய பட்ஜெட் படங்கள்  வெற்றி முக்கியமல்ல. ஏனெனில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும், ஏனெனில் ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குநர் கால்ஷீட் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.  ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றிபெற்றால்தான் தொடர்ந்து படமெடுப்பார்கள், அதன்மூலம் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

 
பேரரசு பேசுகையில்,
 
              தமிழ் சினிமாவில்  கதாநாயகர்கள் சிவப்பாக இருந்தால் அவர்கள் LOVERBOY என்ற இமேஜ் வைத்துவிடுவார்கள், ஆனால் ராம்கி மட்டுமே சிவப்பாக இருந்து ஆக்க்ஷன் ஹீரோவானவர்,மேலும் கிராமத்தில் பல்வேறு திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களை தமிழ் சினிமாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்,
 
தமிழ் சினிமாவில் திரைப்படத்தில் வேகத்தை மக்கள் விரும்புகிறார்கள், உணர்ச்சிபூர்வமான படங்களை விரும்புவதில்லை. பாடல்வரிகளில் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள், தமிழ் சொற்களை பயன்படுத்துவதில்லை . ஜாதி மதம் என எவ்வித வேறுபாடுமின்றி எந்நாட்டவரையும் வாழ வைக்கும் ஒரே நாடு தமிழ்நாடுதான்.
நட்டி பேசுகையில்,
 
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்ட திரைப்படங்களை மட்டுமே எடுக்கமுடியும் உணர்ச்சிபூர்வமான படங்களை எடுக்க முடியாது என்ற இமேஜ்  -யை தகர்த்தெறிந்தவர்  உதயகுமார் . ஆங்கிலத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் ,பிற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்!