பைட் மாஸ்டருக்கு பைனான்ஸ் தரமாட்டார்கள் : ஒரு தயாரிப்பாளரின் குமுறல்!

anjala-adபல படங்களில் சண்டை இயக்குநராக பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்  சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப்சுப்பராயன் தயாரித்துள்ள படம் ‘அஞ்சல’. இதன் ஆடியோ வெளியீட்டுவிழா இன்று நடந்தது.

விழாவில் இயக்குநர் தங்கம் சரவணன் பேசும்போது  ”இது டீக்கடையின் வாழ்வியலைச் சொல்லும் படம்” என்றார்.

”சூப்பர்சுப்பராயன் சினிமாவை நேசிப்பவர். எத்தனையோ கதைகள் சொல்லப்பட்டு இருந்தாலும் யாரும் தொடாத பக்கம் இது.ஸ்டண்ட் மாஸ்டர்  தயாரித்தாலும் சண்டைப் படமல்ல. ஆத்மார்த்த உணர்வைச் சொல்லும் படம் ”என்றார் பசுபதி.

”என்னிடம் இயக்குநர் தங்கம் சரவணன் தினம் ஒரு கதை சொல்லி தொல்லை தருவார். இது ந்தல்ல கதை. ” என்றார்  எடிட்டர் கே. எல். பிரவீன் .

திலீப்சுப்பராயன் பேசும் போது ”என்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என்றார் அப்பா. இருந்தாலும் வர ஆசைப் பட்டேன் . அப்போதெல்லாம் அப்பா பரபரப்பாக இருப்பார் வீட்டிலேயேதங்க மாட்டார். அப்போது எனக்கு ஏக்கமாக இருக்கும் . நான் சினிமாவுக்கு வந்த பிறகு அதே நிலையில் என் மகன் இருக்கிறான். படத்தில் இடையில் பணப் பிரச்சினை வந்த போது பைனான்சியர்களிடம் கேட்ட போது  ஃபைட் மாஸ்டருக்கு பைனான்ஸ் தரமாட்டோம் என்றார்கள் .ஃபைட் மாஸ்டராக இருப்பது தவறா? பிறகு நண்பர்கள் உதவியால் படத்தை  எடுத்து முடித்தேன்.” என்றார்.

விழாவில் விமல், நந்திதா, பசுபதி, முருகதாஸ், இமான் அண்ணாச்சி, பஞ்சுசுப்பு ஒளிப்பதிவாளர் ரவிகண்ணன். இசையமைப்பாளர் கோபி சுந்தர், பாடலாசிரியர் லலிதானந்த் ,இயக்குநர்ஆர். வி. உதயகுமார் ஆகியோரும் பேசினர்.