பொங்கலுக்கு ‘ஐ’வெளியாகும் ! வதந்திகளை நம்பாதீர்!-தயாரிப்பாளர் உறுதி

i5இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது ‘ஐ’.

விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. முதலில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. பட வேலைகள் முடியாததால் தள்ளிபோனது. பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. அப்போதும் வெளியாகவில்லை. அதன் பின் பொங்கல் தினத்தன்று படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஐ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இணைய தளத்தில் பரவத் தொடங்கியது. பொங்கல் தினத்தன்று வெளியாகாது என்றும் இம்மாதம் 30ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.

‘ஐ’ படம் சம்பந்தமாக தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்  உள்ளதாகக் கூறப்பட்ட aivikram1_2055426gபிக்சர்ஹவுஸ் மீடியா லிமிடட்டின் பத்திரிகை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கார்  பிலிம்ஸ்  பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு ரவிசந்திரனின் தயாரிக்கும் ‘ஐ’திரைப் படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பைத் தருகிறோம்.ஜனவரி14ஆம் தேதி   பொங்கலன்று  வெளிவரும் ‘ஐ’ படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சமூகமாக பேசி தீர்க்க பட்டு விட்டது.திரைபடத்துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே ‘ஐ’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வரத் தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப் படுத்துகிறோம். இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம்  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.