மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார்

தலைமுறைகள்’ படத்துக்கு தேசியவிருது கிடைத்ததை ஒட்டி ஊடகங்களை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் சசிகுமார் மற்றும் குழுவினர்.

நிகழ்ச்சியில் சசிகுமார்,  ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் மற்றும் பாலுமகேந்திராவின் உதவி யாளர்கள்  பாலுமகேந்திராவின் படத்துக்கு மெழுகு வர்த்தி யேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முதலில் பேசிய நடிகர் சஷிகுமார், “நான் பாலும கேந்திரா அவர்களின் கதை நேரத்தில்  நடிகனாக கணிசமான பங்கெடுத்தவன். அவரது 53 கதைகளில் 33ல் நடித்தவன். அவர் ஒன்றுமில்லாத எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். ஆக்டிங் மட்டுமல்ல ரியாக்டிங் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.”என்றார்.

நடிகை ரம்யா சங்கர் பேசும் போது, ” பாலுமகேந்திராசாரின் பேரன்தான் அவரது படத்துக்கே இன்ஸ்பிரேஷன். “என்றார். நடிகை வினோதினி, “அவரது சினிமாபட்டறை 2010 முதல் செயல் படுகிறது அதில் நான் பகுதி நேரமாகப் பணிபுரிந்தேன். கடைசியில் என்னைப் பார்க்க விரும்பி போன் செய்தார். என்னால் பார்க்க முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது.”என்றார்.

கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்த இயக்குநர் சசிகுமார் பேசும் போது. “விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் இந் நேரத்தில் அவர் இல்லையே என்கிற வருத்தமும் இருக்கிறது.படைப்புக்கு வயது ஒரு தடையில்லை என்று ஆணித்தரமாக அடித்துக் சொல்லியிருக் கிறார். படத்தில் தாத்தாவுக்கான விருதை பேரன் பெறுவது போல காட்சி வரும். நிஜத்திலும் அப்படியே அவரது தேசிய விருதை பேரன் பெறுவது போல அமைந்து விட்டது. இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப் படுகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் பாலுமகேந்திராவின் உதவியாளர்கள் விக்கி, முகிலன், சபரி, சுந்தர், ஷ்ரவன், ராஜ்குமார், ர«ஜேஷ்கண்ணா, பேரன் ஸ்ரேயாஸ், நடிகர் ரயில்ரவி,மாஸ்டர் கார்த்திக் ஒலிப்பதிவாளர் பரத், கலரிஸ்ட் நவீன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.