மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் படம் ‘தற்காப்பு’.

tharkappu-bk“க்னைடோஸ்கோப்”  சார்பாக  DR.S. செல்வமுத்து & N. மஞ்சுநாத் இணைந்து தயாரிக்க, P. பழனி,& B.முருகேசன் இணை தயாரிப்பில், R.P.ரவி இயக்கத்தில்  உருவாகி  வரும் படம் ‘தற்காப்பு’.

இயக்குநர் பி .வாசுவின் மகன் சக்திவேல் வாசு இதில் கதாநாயகனாக நடிகின்றார். சக்தி  தனது பெயரை  சக்திவேல் வாசு என்று மாற்றிக்கொண்டுள்ளார். .  மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார்.

கதை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் நமது எல்லையில் அமைந்துள்ள கர்நாடகாவின் பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

”மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் அம்சம் கொண்ட கதை இது. தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையால் உருவாக்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும்.

மிகவும் புதுமையான கதைக்களம். காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது ‘தற்காப்பு’.  F.S. பைசல் இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ் ஆனந்த். ஷான் லோகேஷ் எடிட்டிங்கையும்,  , கலையை M.G.முருகன்-ம் கவனிக்கின்றனர்.

இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்தமாதம் வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.என்கிறார் இயக்குநர் R.P.ரவி .