‘மய்யம்’ விமர்சனம்

maiyam-rwஒரு ஏடிஎம் மையத்தில் நடக்கும் கதைதான் ‘மய்யம்’.

ஒரு காதல் ஜோடி. வழக்கம் போல பெண் வீட்டில் எதிர்ப்பு இரவு ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வரச்சொல்கிறாள் காதலி. இதே திட்டத்துடன் தன் நண்பனுடன் கிளம்புகிறான் காதலன். நள்ளிரவு செலவுக்குப் பணம் எடுக்க ஏடிஎம் மையம் போகிறான். அங்கே இன்னொரு பெண்ணும் வருகிறாள். திரும்பிப்பார்த்தால் வெளியே கையில் கடப்பாரையுடன் ஒரு சைக்கோ கொலையாளி. அவன் ஏடிஎம் மையத்தின் வாட்ச் மேனைக் கொன்று விடுகிறான். அங்கே வந்த ஒரு போலீசையும் கொன்று விடுகிறான். கேமராவில் பதிவாகி விடும் என்று உள்ளே நுழையாமல் நிற்கிறான். நாயகனும் நண்பனும் அந்தப் பெண்ணும் வெளியே வராமல் உள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். பக்கத்து அறையிலிருந்து ஒரு குரல் வருகிறது. உதவிக்கு வழிகள் சொல்கிறது.

ஒரு கட்டத்தில் அந்த சைக்கோ அருகில் நகரவே, வெளியேறியவர்கள் மீண்டும் பயந்து சிக்கிக் கொள்கிறார்கள். காதலியோ அங்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டில் காத்திருக்க ,திடீரென்று உள்ளேநுழைகிற ஒரு இளைஞனை சைக்கோ என்று தவறாக நினைத்துக் கொலை செய்து விடுகிறார்கள். முடிவு என்ன என்பதே க்ளை மாக்ஸ்.

நடிகர்கள் நவீன் சஞ்சய், ஜெய் குஹானி, குமரன் தங்கராஜன், சுஹாசினி குமரன்,ரோபோசங்கர் ஹாசி ம் ஜெயின், முருகானந்தம்,  எல்லாரும் முடிந்தவரை நடித்து பங்களித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏ.டி.எம். வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாவலர்களும் இல்லை. இருக்கும் பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

காசிப் ரபீக் இசையில் பாடல்கள் படத்தின் ஆறுதல். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கதை இரவில் நடப்பதால் அதற்கு ஏற்றார் போல் படமாக்கியிருப்பது சிறப்பு.பிர்னா ஹுசைனின் ஒளிப்பதிவு இரவிலும் பளிச்சிடுகிறது.

கதை தொடங்கி ஒரு ஏடிஎம் மையத்தில் சிக்கிக் கொள்கிறது குடிகாரநண்பன் அடைத்துவிட்டுச் செல்வதால் அடைபட்ட அறையில்அருகிலிருந்து பேசும் கேரக்டராக ரோபோ சங்கர் தன்னந்தனியே பேசுகிறார். கலகலப்பூட்டுகிறார்.

ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த கதை வித்தியாசமான கற்பனைதான் ஆனால் அங்கேயே நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பது நீளமாகத் தெரிகிறது. இது வித்தியாச முயற்சிதான் கொஞ்சம் விறுவிறுப்பும் கூட்டியிருந்தால் மய்யம்மீது எதிர்ப்பார்ப்பு மேலும் மையம் கொண்டிருந்திருக்கும்.இப்படி படத்தில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத இளைஞர்களின் இந்த முயற்சியை நிச்சயம்  பாராட்டலாம்.