மாயையை உடைத்த ‘மாஸ்டர்’ வெற்றி:சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேச்சு!

நர மாமிசம்  உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில்,  தமிழில் முதல் முறையாக உருவாகும் படம்  ‘ட்ரிப்’.

பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தை Sai Film Studios சார்பில் தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், V.J.சித்து, V.J.ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, ல‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ட்ரிப்’  படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் விநியோகஸ்தரான சக்தி ஃபிலிம் பேக்டரியின் சக்திவேலன் பேசும்போது, “நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்கக் காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்கிற மாயையை ‘மாஸ்டர்’ படம் உடைத்திருக்கிறது.

ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின் வாங்கிவிட்டன.

சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின்  தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள்.

யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டைவிட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

யோகிபாபு, கருணாகரன் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச் சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றியைப் பெறும். இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சிதான்…” என்றார்.