‘முன்னோடி’ விமர்சனம்

MUNNODI -Movie Stills (26)தாதா ,அடியாள் கதைதான் என்றாலும் அதில் காதல் , ,Sibling Rivalry எனப்படும் பாசப்பொறாமை ,தாய் தம்பிப் பாச உணர்வு எல்லாமும் கலந்த கதையாக உருவாகியுள்ள படம்.

ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றும் நாயகன் ஹரிஷை தன் கூடவே வைத்துக் கொள்கிறார் தாதாவான அர்ஜுனா. ஹரிஷும் அவரைத் தனது அண்ணனாக எண்ணுகிறார். விசுவாசமாக அவர் சொல்லும் வேலையை செய்து வருகிறார். தாதாவிடம் ஏற்பட்ட பழக்கத்தினால் தனது குடும்பத்திடம் இருந்து விலகியிருக்கும் ஹரிஷ், தனது தம்பியைக் கூட விரோதியாகப் பார்க்கிறார். அதே சமயம், தன் அக்காள் கணவரான அர்ஜுனாவிடம் ஹரிஷ் நெருக்கமாக இருப்பதை வெறுக்கும் பாவல், ஹரிஷைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, யாமினி பாஸ்கர் மீது காதல் கொள்ளும் ஹரிஷ், அந்த காதலால் தனது  தம்பியும் ,அம்மாவும் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். இதனால் அர்ஜுனாவிடம் இருந்து விலகிவிடுகிறார். இதைப் பயன்படுத்தி போலீஸ் அர்ஜுனாவுக்கும், ஹரிஷுக்கும் குறி வைக்க, மறுபுறம் பாவல் அர்ஜுனா மூலமாகவே ஹரிஷைக் கொல்லத் திட்டம் போடுகிறார்.

MUNNODI -Movie Stills (40)ஒரு பக்கம் போலீஸ், மறுபக்கம் அர்ஜுனா என்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஹரிஷ், அவற்றில் இருந்து மீண்டாரா? தனது குடும்பத்துடன் சேர்ந்தாரா இல்லையா, என்பது தான் ‘முன்னோடி’ படத்தின் கதை.

அறிமுக நடிகர் என்ற அடையாளம் தெரியாமல் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ள ஹரிஷ், மந்திர மூர்த்தியின் தம்பியாக போலீசிடமே வாலாட்டும் காட்சிகளில்  துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார்., அதே மந்திர மூர்த்தியை, தனது தம்பிக்காக எதிர்க்கும் காட்சியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மந்திர மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுனா அலட்டாத நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு எடை கூட்டியுள்ளார். அவருக்கு இணையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவரும் மிரட்ட, வில்லனாக வரும் பவலும் பதிகிறார்.

நாயகி புதுமுகம் யாமினி பாஸ்கர், சுஜா வாருணி, நாயகனின் அம்மாவாக நடித்துள்ள சித்தாரா என்று படத்தில் நடித்துள்ள அனைவரும்தங்கள்ச் வேலையை சிறப்பாக செய்திருக்க, கொலை சம்பவ காட்சிகளில் நடித்துள்ள அந்த இளைஞர்கள் பார்வையிலேயே மிரட்டுகிறார்கள்.

கத்தி எடுத்தால் கத்தியால் தான் மரணம், என்பதை அழுத்தமாக க் றும் விதத்தில் இப்படத்தை இயக்கியுள்ள எஸ்.பி.டி.ஏ.குமார், உறவுகளின் மேன்மை குறித்து சொல்லியிருக்கும் விதத்திற்கு சபாஷ் சொல்லலாம்.

MUNNODI -Movie Stills (18)வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவும், பிரபு சங்கரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. கூடுதலாக பாடல்களில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் புதியதாக இருப்பதோடு, கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது. இது தொழில்நுட்ப அசத்தலில் நல்லதொரு விஷூவல் ட்ரீட்.

காதல், ஆக்‌ஷன் இவை இரண்டுடன் குடும்ப உறவு என்பதையும் கலந்து சமமாக சொல்லியிருக்கும் இயக்குநர், தவறான வழியில் பாதை மாறிப் போகும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையிலும் இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

கோவிலில் தனக்கு ஸ்கெட்ச் போடும் ரவுடிகளை அர்ஜுனா அட்டாக் செய்யும் ஐடியாவுக்கும், அந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணிக்கும் அப்ளாஸ் கொடுக்கலாம். படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் திரைக்கதையை வேகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

முதல் பாதியில் அண்ணன் – தம்பி போல இருக்கும் அர்ஜுனா – ஹரிஷ், இரண்டாம் பாதியில் எதிரிகளாக மாறுவதும், பிறகு இவை அனைத்திற்கும் காரணமாக இயக்குநர் சொல்லப்படும் சம்பவங்களும், ஹரிஷின் தம்பியின் கொலைக்கான காரணம், ஆகியவை எதிர்பாராத திருப்பங்கள். சில காட்சிகளில் செய்தொழில் நேர்த்தி காட்டியுள்ள இயக்குநர் அதைப் படம் முழுக்கப் பராமரித்திருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.

பாத்திரங்களின் தேர்வு, நடிகர்களின் நடிப்பு, சண்டைக்காட்சி என்று அனைத்துமே படத்தின் கதை ஓட்டத்துக்கேற்ப கையாளப்பட்டுள்ளன.

அவரவர்க்குப்   பிடித்த ஒன்று இருக்கும்.இந்த ‘முன்னோடி’ படத்தை துணிந்து ஒரு முறை பார்க்கலாம் ஏமாற்றம் தராது .