‘மெட்ராஸ்’ விமர்சனம்

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா madras‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார்.

ஒரு சுவரில் படம் வரைவதில் தொடங்கும் அரசியல் பகையை, துரோகம், பணம் போன்றவை எப்படி எல்லாம் கூர்தீட்டி பெரும்பகையாக்கி அரசியலாக மாற்றி பலரைப் பலி கொள்கிறது என்பதே கதை. இதன் இடையில் ‘காளி’ கார்த்தி ,கேத்தரின் காதல் காட்சிகள் என்று அஜினோ மோட்டோ தூவி கல கல படமாகியுள்ளது மெட்ராஸ்:

வேலையுள்ள பட்டதாரி கார்த்தி தன்னை அறியாமல் எப்படி இந்த அரசியல் சுழலில் சிக்குகிறார் என்பது திக் திக் சுவாரஸ்யம்.

கார்த்தி யதார்த்த நடிப்பில் சில படிகள் மேலே சென்றுள்ளார். பிற பாத்திரங்களுக்கு நடிக்க இடம் விட்டதில்  பெருந்தன்மையில் பல படிகள் மேலே சென்றுள்ளார்..

சீரியஸ் முகபாவம் காட்டி காதலிக்கும் கேத்தரின் தெரசா  அபாரம்.

கார்த்தி நண்பனாக வரும் கலையரசன் லோக்கல் அரசியல்வாதி கேரக்டரில் கச்சிதமாய் பொருந்துகிறார். கொலைப்பழி ஏற்று நண்பனை காப்பாற்றி நட்பிலும் வீரியம் காட்டுகிறார். கார்த்திக்கு பெண் பார்க்கும் அம்மா ரமா,ஆங்கிலத்தில் சரளமாக பேசி பைத்தியம் போல் திரிபவர் மட்டுமல்ல நந்தகுமார், கோபி, விஜி, ரித்விகா,    எனப் படத்தில் வரும் பிற சிறு பாத்திரங்களும் மறக்க முடியாதவர்கள்.கவனம் ஈர்க்கிறார்கள்.

Madras-rwஅதுமட்டுமல்ல அந்த ஹவுசிங் போர்டு சுவர் கூட சிரிக்க, சிந்திக்க, பயமுறுத்தி, பீதியூட்டி நவரசம் காட்டி நடித்துள்ளதே.

படத்தின் கதைக்குப் பின்னணியால் பலம் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் ராமலிங்கம்.ஒளிப்பதிவில் வடசென்னையை முரளி. யதார்த்த ஓவியமாக  வரைந்துள்ளார் கமர்ஷியல் இசையிலும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் மனதை தொடுகின்றன.

காட்சிகளில் சமரசமில்லாமல் யதார்த்தம் நிறுவிய இயக்குநருக்கு சபாஷ்.

வடசென்னை வன்முறைக் களமல்ல என்று கூறிவந்த ரஞ்சித் தன் படத்தில் இத்தனை வன்முறைக் காட்சிகளை வைத்துள்ளது ஏன்?