‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா

Yesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)Yesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)kjj11தனது காந்தக்குரலின் மூலம் தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.எப்போதும் காற்று வெளியில் இப்போதும் எங்காவது இவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.Yesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)‘அந்த சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்  தொடும் விழாYesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)வாக நடைபெறவுள்ளதே ‘யேசுதாஸ் 50’.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.

சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது.

இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களை நிறைவு செய்து தனது இசைப்பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Yesudas-b_tஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப் போற்றி கவுரவிக்க உள்ளனர்.

சங்கீத சாம்ராட் ஜேசுதாஸ்: ஒரு சிறு பார்வை!

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரளமாநிலம்கொச்சியில் 1940ம்ஆண்டுஜனவரி 10ம்தேதிபிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபலபாடகராகவும்மேடைநடிகராகவும்விளங்கியவர். மூத்தமகன் யேசுதாசுக்கு சிறு வயதிலேயேஇசைப்பயிற்சிஅளிக்கஏற்பாடுசெய்தார். கர்னாடகஇசையின்அடிப்படையானவிஷயங்களை தந்தையிடம்இருந்தேகற்றுக்கொண்டயேசுதாஸ், பின்னர் குஞ்சன்வேலுஆசான், பி.எக்ஸ்.ஜோசப், சிவராமன்நாயர், ராமகுட்டிபாகவதர், கே.ஆர்.குமாரசாமி, செம்மங்குடிசீனிவாசஐயர், செம்பைவைத்யநாதபாகவதர்,பல்லவி நரசிம்ம ஆச்சாரியாஆகியோரிடன்இசைபயின்றார்.

கொச்சி,செயிண்ட்செபாஸ்டியன்உயர்நிலைப்பள்ளிமாணவனாகஇருந்தபோதேபல்வேறுபோட்டிகளில்பங்கேற்று சிறந்தபாடகராகதேர்வுசெய்யப்பட்டுபரிசுகளைவென்றார். மாநிலஅளவிலானஇளைஞர்விழாவில்கர்நாடக வாய்ப்பாட்டுபிரிவில்முதல்பரிசுவென்றது, இவரதுஇசைத்திறனைபெரியஅளவில்வெளிச்சத்துக்குகொண்டு வந்தது. எர்ணாகுளத்தில் 1958ல்நடந்தகேரளகத்தோலிக்கஇளைஞர்விழாவில்தங்கப்பதக்கம்வென்றுஅசத்தினார்.

பள்ளிப்படிப்புமுடிந்ததும், கொச்சின்அருகேதிரிப்புனித்துராவில்உள்ளஆர்.எல்.வி.மியூசிக்அகடமியில்சேர்ந்து கானபூஷனம்பாடப்பிரிவில்சேர்ந்துபயின்று, சிறந்தமாணவராகடபுள்புரமோஷனுடன்தேர்ச்சிபெற்றார். மேற்படிப்புக்காக, திருவனந்தபுரம்ஸ்ரீசுவாதித்திருநாள்மியூசிக்அகடமியில்சேர்ந்தவர், குடும்பசூழல்காரணமாக படிப்பைதொடரமுடியாமல்போனது.

1961ல்முதல்முறையாகதிரைப்படவாய்ப்புகிடைத்தது. பிரபலகவிஞர்ஸ்ரீநாராயணகுருஎழுதிய ’ஜாதிபேதம்மத துவேஷம்ஏதுமில்லா’ என்றஅந்தப்பாடல்மிகுந்தவரவேற்பைபெற்றது (படம்: கால்பாடுகள்). அதைத்தொடர்ந்து வாய்ப்புகள்குவிந்தன. அனைத்துதரப்பினரையும்தனதுகம்பீரமானஇனியகுரலால்கவர்ந்திழுத்த யேசுதாஸ், கேரளா மட்டுமில்லால்இந்தியாமுழுவதுபல்வேறுமொழிதிரைப்படங்களில்பின்னணிப்பாடகராகதனதுமுத்திரையைப் பதித்தார்.

தமிழ்த்திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின்பொம்மையில் முதன்முதலாக “நீயும்பொம்மை, நானும்பொம்மை” என்றபாடல்மூலம்அறிமுகமானார். ஆனால்முதலில்வெளியானபடமாக’கொஞ்சும்குமரி’அமைந்தது. 1970களில் இந்தித்திரைப்படங்களில்பாடத்துவங்கினார். முதல்இந்திமொழிப்பாடல் “ஜெய்ஜவான்ஜெய்கிசான்” என்ற திரைப்படத்திற்குபாடினார். ஆயினும்அவர்பாடிவெளிவந்தமுதல்இந்திப்படமாக “சோடிசிபாத்” அமைந்தது. இவற்றைத்தொடர்ந்துபலமொழிப்படங்களில்பல்லாயிரக்கணக்கானப்பாடல்களைப்பாடிபலவிருதுகளையும் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ்குமார், சத்யன், பிரேம்நசீர், மம்மூட்டி, மோகன்லால்உள்படஇந்தியாவின்பிரபலநடிகர்கள்பலருக்கும்பாடல்களைப்பாடியுள்ளார்.

1968ல்சோவியத்அரசின்அழைப்பின்பேரில்கலாசாரத்தூதராகரஷ்யாவில்சுற்றுப்பயணம்மேற்கொண்டார். கஜகஸ்தான்வானொலியில்இவர்பாடியரஷ்யமொழிப்பாடல்அந்நாட்டுரசிகர்களைவெகுவாகக்கவர்ந்தது. புகழ்பெற்றலண்டன்ராயல்ஆல்பர்ட்ஹால் (2001), சிட்னிஓபராஹவுஸ் (2006) அரங்குகளில்இசைநிகழ்ச்சி நடத்தும்வாய்ப்பும்இவரைத்தேடிவந்தது.1965ல்இந்தியா – சீனாஇடையேபோர்நடந்தபோது, நாடுமுழுவதும்இசைநிகழ்ச்சிகளைநடத்திநிதிதிரட்டியவர், டெல்லியில்அப்போதையபிரதமர்இந்திராகாந்தியிடம்அதைநேரில்வழங்கிஅவரதுபாராட்டுகளைப்பெற்றார்.

தமது திரைவாழ்வில்வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப்பயணத்தை தொடர்ந்துவரும்அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளமொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம்ஆகியமொழிகளில் 50,000-க்கும்கூடுதலானதிரைப்பாடல்களைப் பாடிஈடுஇணையற்றசாதனையாளராகவிளங்கிவருகிறார்.

சிறந்ததிரைப்பின்னணிப்பாடகர்என்றவகையில், ஏழுமுறைதேசியவிருதுபெற்றுசாதனைபடைத்துள்ளார். மாநிலஅளவில்கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம்மற்றும்மேற்குவங்கஅரசுகளிடம்மொத்தம் 45 முறை சிறந்ததிரைப்பாடகராகவிருதுபெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.

திரையிசையுடன்,கர்நாடகஇசைக்கச்சேரிகள்பலநிகழ்த்தியுள்ளார்.

சமயப்பாடல்கள், பிறமெல்லிசைப்பாடல்கள்அடங்கியஇசைத்தொகுப்புகளையும்வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்குஇசைஇயக்குனராகவும்பணியாற்றியுள்ளார். 2006ஆம்ஆண்டுசென்னைஏவிஎம்அரங்கில்ஒரேநாளில்நான்குதென்னிந்தியமொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களைபாடிசாதனைநிகழ்த்தினார். அரைநூற்றாண்டுகள்கடந்தும்இந்தகானகந்தர்வனின்இசைப்பணி இனிதேதொடர்கிறது.

Yesudas-b_t விருதுகள்மற்றும்பட்டங்கள்

* கானகந்தர்வன் – 1968, கேரளமகாகவிஸ்ரீ.ஜி.சங்கரகுருப்Yesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)Yesudas 50  Programme By lakshman Sruthi Press Meet Stills (8)வழங்கிகவுரவித்தார்.

* சிறந்ததிரைப்படபின்னணிப்பாடகருக்கானகேரளமாநிலவிருது – 1969 (24 முறைபெற்றுள்ளார். பல்வேறு மாநிலங்கள்சார்பாகமொத்தம் 45 முறை).

* சிறந்ததிரைப்படபின்னணிப்பாடகருக்கானதேசியவிருது – 1972, 1973, 1976, 1982, 1987, 1988, 1991.

* பத்மஸ்ரீ – 1975

* கலைமாமணி – 1986

* அண்ணாமலைபல்கலைக்கழகம்சார்பில்டாக்டர்பட்டம் – 1986

* லதாமங்கேஷ்கர்விருது – 1993

* தேசியகுடிமகன்விருது – 1994, அன்னைதெரசாவழங்கிகவுரவித்தார்.

* சங்கீதகலாசிகாமணி – 2002, இந்தியன்பைன்ஆர்ட்ஸ்சொசைட்டி, சென்னை.

*பத்மபூஷண் – 2002

* ரஞ்சனிசங்கீதகலாரத்னா – 2002

* சப்தகிரிசங்கீதவித்வான்மணி – 2002, ஸ்ரீதியாகராஜசுவாமிவாரிகோயில்அறக்கட்டளை, திருப்பதி.

* உடுப்பிஆஸ்தானவித்வான் – 2002, உடுப்பிஸ்ரீகிருஷ்ணமடம்சார்பில்வித்யாதீஷசுவாமிகள்வழங்கினார்.

* சுவாதிரத்னம்விருது – 2002, சென்னைமலையாளகிளப்.

* சங்கீதகலாசுதாகரா – 2002, உடுப்பிஸ்ரீகிருஷ்ணர்கோயில்.

* கொரம்பயில்அகமதுஹாஜிஅறக்கட்டளைவிருது – மதநல்லிணக்கத்தைபரப்பியதற்காக – 2003.

* ஜே.சி.டேனியல்விருது – 2003, மலையாளதிரைப்படபணியில்வாழ்நாள்அர்ப்பணிப்புக்காக, கேரளஅரசுவழங்கி கவுரவித்தது.

* குட்டிகுராகேலோபோல்விருது – 2004, வனிதாஇதழ்சார்பில் வழங்கப்பட்டது.

* வாழ்நாள்சாதனையாளர்விருது – 2004, பிலிம்பேர்சார்பில், நேருஸ்டேடியம் – சென்னை.

* விஸ்டம்சர்வதேசவிருது – 2005

* வாழ்நாள்சாதனையாளர்விருது – 2005, அமெரிக்காவின்நியூயார்க்நகரில், வடஇந்தியதிரைத்துறைசார்பில் வழங்கப்பட்டது.

* சிறந்தபின்னணிப்பாடகருக்கானஆந்திரஅரசின்நந்திவிருது – 2006.

* உதயஷங்கர்நினைவுபிலிம்விருது – 2006, கன்னடசித்ராசாகித்யரத்னாஸ்ரீஉதயஷங்கர்நினைவுஅறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

* கவுரவஉறுப்பினர்அந்தஸ்து – 2008, வான்கூவர்சிம்பனிஆர்க்கெஸ்ட்ரா, கனடா.

* பிலிம்பேர்விருது – 2009

* மகாத்மாகாந்திபல்கலைக்கழகம்சார்பில்டாக்டர்பட்டம் – 2009.

* கேரளசங்கீதநாடகஅகடமிவிருது – 2010.

* சிஎன்என்ஐபிஎன்சார்பில்வாழ்நாள்சாதனையாளர்விருது – 2011, டெல்லி.

* பெப்காஅம்ரிதாபிலிம்விருது – 2011

* ஹரிவராசனம்விருது – 2012, சபரிமலைசந்நிதானம்.

* லிம்காசர்வதேசவிருது – 2012, ஆண்டின்சிறந்தமனிதராகதேர்வு.

குறிப்பு:Yesudas-b_t

6 மணி நேரத்துக்கும் மேலாகப் பொழியவுள்ள இசை மழையில், திரு.யேசுதாஸ் அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் நம்மையெல்லாம் நனைத்து மூழ்கடிக்கக் காத்திருக்கின்றன. சங்கீத சங்கமமாய் அமையும் இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப்பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்க உள்ளனர்.
தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்த இசை விழா, இந்த 2015-ம் வருடம் ஜனவரி 10ம் தேதி அன்று 75வது பிறந்தநாள் காணும் திரு.யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டமாகவும் அமைய பெறுவதில் பெருமை கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி விஜய்தொலைக்காட்சியில்ஒளிபரப்புச்செய்யப்பட உள்ளது. நுழைவுச்சீட்டுகள்கண்கவர்விதமாகவும், புதுமையாகவும்பலவண்ணங்களில்அச்சிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின்வசதிக்காகஅனுமதிசீட்டுகள்லஷ்மன்ஸ்ருதிமியூசிகல்ஸ் – வடபழநி /எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டிநகர், நந்திசிலைஅருகில் / நாயுடுஹால் – அனைத்து கிளைகள்.

மேலும் விவரங்களுக்கு: 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778.
இணையதளம்மூலமாக (Online Ticket Booking) டிக்கெட்முன்பதிவுசெய்யவும்கீழ்க்கண்டஇணையதளங்கள்மூலம்டிக்கெட்டுகளைப் பெறவும்வசதி செய்யப்பட்டுள்ள்து

www.lakshmansruthi.comwww.ticketnew.comwww.bookmyshow.com, www.madrasevents.in, www.indianstage.in , www.meraevents.com, www.eventjini.com