ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளைக்கு நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்

sarath5ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார்,  கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, ஜெயின் குரூப்ஸின் தலைவர் அசோக் குமார் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளையின் தலைவர் சத்யஜித் சேத்தியா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசுகையில்-ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்தும் இரண்டாவது ஆண்டு வேலை வாய்ப்பு முகாமில் 1000 மாணவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். மொத்தம் 1500 இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இவர்களில் 600 பேருக்கு பணி நியமன ஆணை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில் 48 நிறுவனங்கள் அரங்கங்களை அமைத்து பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர் என்றார்.

நடிகர் சரத்குமார் வேலை வாய்ப்பு முகாமை ;துவக்கி வைத்து பேசியதாவது:- ”ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை மாணவர்களுக்கு புத்தகங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துவது பெருமைக்குரியது. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் குறிக்கோளான விஷன் 2020 அடைவது நம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. மாணவர்கள் தான் இந்நாட்டின் விதையின் உயிர்நாடி.

இந்த ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளையின் பணிகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக கலந்து கொள்கிறேன். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருவது இது தான் முதல் முறை. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளையின் கல்வி மேம்பாட்டிற்காக  ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

sarat-ryaஎன்னுடைய வாழ்க்கையில் மூன்று ஈ(E) முக்கியமானதாக கருதுகிறேன். அதாவது கல்வி (Education), வேலைவாய்ப்பு (Employment), அதிகாரம் (Empowerment).

இந்த வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும்.  ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை ஒரு புதிய புரட்சியை உருவாக்கி அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க முனைந்துள்ளது. ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 70 சதவீதம் 100 மதிப்பெண்கள் பெறுவதால், வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அரிதாகிறது.

இக்காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை முறியடித்து தைரியமாக துணிந்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும்.  மகாத்மா காந்தி சொன்னபடி எந்த வேலை என்றாலும் தன்மானத்தோடு ஏற்றுக்கொண்டு அதன் பின் நம் குறிக்கோளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவு கூர்கிறேன்”. இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார்.

இவ்விழாவில் ஞனேஷ் ஜெயின், ராஜேஷ் ஜெயின், பரத் சோர்டியா மற்றும் ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை  நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.