‘ரெமோ’ விமர்சனம்

remo-rwசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா நடித்துள்ள படம். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளர்.

கண்டதும் காதல் கதைதான். ஒரு முறை  கீர்த்தி சுரேஷைப் பார்த்து அசந்து விடும் சிவகார்த்திகேயன் மீண்டும் யதேச்சையாக சந்திக்க வாய்ப்புhகள் வரவே, ஆகா அடைந்தால் அவரைத்தான்அடைவது என்பதில் குறியாக இருக்கிறார். ஆனால் கீர்த்தி சுரேஷுக்கோ திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இருந்தாலும் அவர் மனசை மாற்றி எப்படி சேர்கிறார் என்பதே கதை.

remo-okrsரெமோ என்றால் என்ன? சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷைத் திருமணம் செய்யப் போடும் தகிடுதத்தங்களில் பெண் வேடம் போடுவதும் ஒன்று அந்த   நர்ஸ் வேடத்தின் பெயர்தான் ரெஜினா மோத்வானி. அதுதான் ‘ரெமோ’ வாம்.

கீர்த்தி சுரேஷைச் சந்திக்கும் சிவா, அவரிடம் பழக நர்சு போல பெண்வேடமிட் டு நெருங்குகிறார்.திருமணத்துக்கு நிச்சயமாகியிருந்த அவர் மனதை காதல் திருமணம்தான் மகிழ்ச்சி யானது என்று சொல்லி கலைக்கிறார் .வழக்கம் போல நிச்சயமாகியுள்ள மாப்பிள்ளையை வெளிநாட்டுக்கார பிடிவாதக்காரனாகக் காட்டி மனம்மாறி திருமணம் மாறுகிற கதைதான் ‘ரெமோ’.

இது நம்ப முடியாத ஆங்காங்கே லாஜிக் இடறி விழும் திரைக் கதைதான். முழுப்படமும் ‘படமாக’வே பார்க்க வைத்திருக்கிறார்கள் .இருந்தாலும் பெண் வேடமிட்டுச்சிவா செய்யும் கலாட்டாக்கள் நாடகத்தனம் என்றாலும் ரசிக்க வைத்துள்ளனர். பெண்வேடத்தில் செய்யும் குறும்புகளும் கீர்த்தி சுரேஷின் அழகும் பலகுறைகளை உற்சா கம் இட்டு நிரம்பி விடுகின்றன.

கற்பனையை விட ஒப்பனையே போதும் என்று நம்பியிருக்கிறார்கள்.மேலும் சிரத்தை எடுத்து சினிமாத்தனங்களைக்  குறைத்து இருந்தால் படத்தின் தரம் கூடியிருக்கும்

நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக் என்று ‘ரெமோ’  வை ஜாலி ஜமாவாக்கவே ஆசைப் பட்டுள்ளார்கள். அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.