ரெயின் டிராப்ஸ் காலண்டர் வெளியீட்டு விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள்!

raindrops15பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல பாடகர் பால முரளி கிருஷ்ணாவுக்கும் இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படுத்திய விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கும் Rain dropss என்கிற சமூகசேவை நிறுவனத்தின் சார்பாக ability foundations என்ற அமைப்புக்காக நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு  பல்வேறு துறைகில் சாதனை புரிந்த மனிதர்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட  ஆண்டு நாள்காட்டி [ calender ] வெளியீட்டு விழாவில் நடந்தது. சமூக அந்தஸ்தை தங்களது சேவை மூலம் பெற்றவர்களின்  படங்கள் கொண்டு தயாரிக்கப் பட்ட காலண்டரில்  மலேசியா ஆஸ்ட்ரோ தொலைகாட்சியின் துணைத் தலைவர் என் சி ராஜாமணி,தமிழ் பேச்சாளர் முனைவர் ஞானசம்பந்தன்,விஞ்ஞானி வளர்மதி, விவேகானந்தா கல்விக் குழுமத்தின்  தலைவர் திரு கருணாநிதி, A V A  cholayil  நிறுவனத்தின் தலைவர் அனூப்,ability foundation தொண்டு நிறுவனத்தின்  நிறுவனரும் ,செயல் தலைவரும் ஆன ஜெயஸ்ரீ ரவீந்திரன், வி ஜி பி குழும நிறுவனங்களின் தலைவர் முனைவர் வி ஜி சந்தோசம்,சமூக சேவையாளர் சேவாலயா  முரளி, மற்றும் சமீபத்தில் பெய்த பெரும் மழை வெள்ளத்தில்  ஒரு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய யூனுஸ்  ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இவர்களின் படங்கள் இடம் பெறும் குறிப்பேடுகளில்  மக்கள் மனதில் நீங்கா  இடம் பெற்று இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த திரு அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிகள் பதிக்கப் பட்டு உள்ளது.பிரபல பாடகி வாணி ஜெயராம்,இசை அமைப்பாளர் ஏ ஆர் ரைஹனா,  சுல்தான் அகமது இஸ்மாயில் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதி உதவி மூலம் பல்வேறு தரப்பினருக்கும் தொண்டு செய்ய இந்த நிறுவனத்தினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.