ரெயின் ட்ராப்ஸ் – சாதனைப் பெண்கள் 4 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா!

PIcs (48)ரெயின் ட்ராப்ஸ் அமைப்பின் 4ம் ஆண்டு சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியின் உள்அரங்கில் மார்ச் 26 அன்று நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

ரெயின் ட்ராப்ஸ் – பல் திறன் கொண்ட இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு சமுக அமைப்பாகும். இந்த அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகள், ஊடகம் மற்றும் பாடல்கள் மூலம் சமுக விழிப்புணர்வுக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியும், இசையமைப்பாளருமான நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் அவர்களின் அன்னையுமான ஏ.ஆர்.ரஹானா அவர்களின் வழிகாட்டுதலில் ரெயின் ட்ராப்ஸ் பல சமுக முன்னேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

PIcs (17)இந்த அமைப்பின் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் ஆவார். சாதனைப் பெண்கள் 4ம் ஆண்டு விருது வழங்கும் விழா குறித்து அவர் கூறிய போது, “பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்மணிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பதில் ரெயின் ட்ராப்ஸ் பெருமகிழ்ச்சி கொள்கிறது. சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்தியவர்கள், தங்கள் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்துவதே இந்த விழாவின் நோக்கமாகும்” என்று கூறினார்.

விருது பெற்றவர்களின் விவரம்:

 

Dr. Tessy Thomas             Missile Woman of India – Project Director of Agni

Ms. Meenakshi Vijayakumar      First Indian Women Fire Officer

Wing Commander Puja Thakur  First Women Officer to led Guard of Honour for US President

Ms. Rupa Devi   First Women Football Referee FIFA

Ms. J Mohanasundari     Managing Director – Sharp Electrodes Pvt Ltd

Ms. Sudha Raghunathan               Music

Ms. Laxmi Agarwal          Acid Attack Fighter, Model for fashion brands

Dr. Malini Chandrasekharan        Medicine

Ms. Vasanthakumari      Asia’s First Women Bus Driver

Ms. Sudha Kongara         Film Director

இவ்விழாவில் ADGP பிரதீப் V பிலிப், நந்திதா – தஞ்சாரா நிறுவன இயக்குநர், கல்வியாளர் Dr.மரியா ஜீனா ஜான்சன், நல்லம்மை ராமாநாதன், கிருஷ்ணா ஸ்விட்ஸ் முரளி, V.G.சந்தோஷம், C.K.குமரவேல், வீணா குமரவேல், Dr.T.V. தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .