லிம்கா புக்கில் இடம் பெறவிருக்கும் அரண்மனை 2 படத்துக்கான 103 அடி உயர அம்மன் சிலை! !

amman-sila44iஅரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி  இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா , ஹன்சிகா , பூணம் பாஜ்வா , சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி.  அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி உயர  பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலை என்றும்  இதைப் போன்ற 103 அடி  உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினர். இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் சாதனை முயற்சிகள் இடம் பெறும் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.
இந்த சிலையை உருவாக்கிய கலை இயக்குநர் குருராஜ் கூறியதாவது ,” அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்ச்சிக்கு பிரமாண்டமான அம்மன் சிலை ஒன்று தேவைப்பட்டது. அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்று தான் யோசித்தோம். அதன் பின் அதைப் பார்க்கும் போது உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி உயரத்தில் உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம்.மிக பெரிய வேலைப்பாடுக்கு பின்பு நானும் என் குழுவும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம். இந்த சிலை செய்து முடிக்க நாற்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் , ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலை நாங்கள் உருவாக்கினோம். முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். இதை
போன்ற அம்மன் சிலை எங்கும் பார்க்க முடியாது என்றும் இந்த சிலை சிறப்பாக வர மோல்டர் மணி மற்றும் குழுவினர் முக்கிய காரணம் ”என்றும் கூறினார்.