விஜய் சேதுபதி -திரிஷா நடிக்கும்’ 96′ படம் தொடங்கியது!

IMG_9835  ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ போன்ற  வெற்றிப் படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

DSC_9476இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கோவிந்த் மேனன், படத் தொகுப்பு – கோவிந்தராஜ், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா, எழுத்து, இயக்கம் – சி .பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்.

IMG_9887இந்த படத்தின் துவக்க விழா  சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குநர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குநர் லஷ்மண், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அத்துடன் கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.