விஜய் நடிக்கும் “தளபதி 60” படப்பிடிப்பு தொடங்கியது!

vijay60 விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது.

எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான B. வெங்கட்ராம ரெட்டி வழங்க விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி EVP ஸ்டுடியோவில் பூஜையுடன்  தொடங்கியது.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
‘கத்தி’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதிஷ் இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார்.. மற்றும் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள் .

முதன்முறையாக இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன் இளையதளபதி விஜய்யுடன் கைகோர்க்கிறார்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய,  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்திற்கு எடிட்டிங்  பிரவின் கே.எல்.

கலை இயக்குநர் –  பிரபாகர்

ஸ்டன்ட்   –  அனல்அரசு

காஸ்டியூம்  டிசைனர்   –  சத்யா N.J

புராஜெக்ட் ஹெட்   –   A.ரவிச்சந்திரன்

ஆப்ரேடிங்  ஹெட்   –  குமார்

இன்றும் நாளையும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.