விஜய பிரபாகரனின் சென்னை பேட்மிண்டன் அணியின் அறிமுக விழா!

vijaprabakaran1விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன்  சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார்.அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் இன்று காலை(24/12/2015) நடைபெற்றது.

அணியில் உள்ள வீரர்,வீராங்கனைகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாலும்,என் தந்தையின் ஆதரவாலும் இந்த அணியை வாங்கியுள்ளேன்.இந்த அணியில் நிறைய இளம் வீரர்களும்,குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடிய பி.வி.சிந்து சென்னை அணிக்காக விளையாடுவது எங்கள் அணிக்கு பலம்.மேலும்சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் உள்ளனர் .மேலும் கங்குலி பிரசாத் பயிற்சியாளராய் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.

எங்கள் அணியின் அம்பாஸிடராக வளர்ந்து வரும் இளம் நாயகனாக கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் உள்ளார்.தனது சகோதரர் என்பதால் சண்முக பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடர்க்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரை தேர்வுசெய்துள்ளனர்.சென்னை அணியின் லோகோவில் சிங்கமுகத்தை வைத்ததற்கு காரணம்,தான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்றும், இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் அந்த அணியை ஞாபகபடுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம். மேலும் சென்னைகிரிக்கெட் அணிக்கு விசில் போடு சென்னைபுட்பால் அணிக்கு சுத்தி போடு என்ற முழக்கம் இருப்பது போல சென்னைபாட்மிண்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்றமுழக்கத்தை இந்த அணிக்கு வைத்துள்ளனர்.மஞ்சள் நிறத்திலான சென்னை அணியின் ஜெர்ஸியையும் அறிமுகப்படுத்தினர்.சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ள நிவாரணபொருட்கள் வைத்துள்ளதால் அங்கு போட்டிகளை நடத்த இயலவில்லை என்று கூறினர்.