விமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரபு

IMG_4178தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபுவும் விக்ரம் பிரபுவும் ஊடகங்களைச் சந்தித்தனர்.

தனது மகன் விக்ரம் பிரபு நடித்து ‘வாகா’ ,’வீரசிவாஜி’ இரண்டு படங்களை உருவாகி வருவதாகத் தெரிவித்தார் பிரபு. அவர் மேலும் பேசும் போது

”என் தந்தையைத் தொடர்ந்து எனக்கும் அன்பையும்ஆதரவையும்  காட்டியது போலவே என் மகன் விக்ரம் பிரபுமீதும் அன்பையும்ஆதரவையும் காட்டுகிறீர்கள். மகிழ்ச்சி ,நன்றி ,இதற்குக் காரணம் நானல்ல. அன்னை இல்லம், நடிகர் திலகம் என்று நீங்கள் வைத்துள்ள அன்புதான் . இது பெரிய விஷயம். இது என்றைக்கும் தொடர வேண்டும்.

‘வாகா’ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது அங்கு அதற்காக ராணுவத்தினர் மிகவும் உதவி செய்தார்கள். குறிப்பாக மேஜர்ரவி, மேஜர்ரோஹித் பெரிதும் உதவினர். முதலமைச்சர் முப்தி முகமது சயீத் குடும்பத்தினரைப் பார்த்தோம். காஷ்மீரில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை. அமைதியாக இருந்தது. இனிமேல் நாமும் காஷ்மீருக்கு சுற்றுலாவாக  போகலாம். இதையே காஷ்மீர் முதல்வரும் தமிழ் நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக சொன்னார்.

இப்போது மீடியாக்கள் பெரிதாகி விட்டன. நிறைய டிவி சேனல்கள்இருக்கின்றன.
2500 பேர் ஓட்டு போட்டநடிகர்  சங்கத் தேர்தலை உலகப் பிரச்சினை போல் கொண்டு போனது மீடியாக்கள்தான்.இன்று மீடியாக்களில் அவ்வளவு போட்டி இருக்கிறது.

எங்களையும்  சினிமாவையும்  மக்களிடம் கொண்டு செல்பவர்கள் பத்திரிகையாளர்கள் நீங்கள்தான். நீங்கள் எழுதும் போதுஆரோக்கியமாக நாகரிகமாக கண்ணியமாக இருந்தால் எல்லாருக்கும் நல்லது.

விமர்சனம் தப்பில்லை. அதில் கண்ணியம் வேண்டும். புதியவர்கள் சிலர் புதுமை புரட்சி என்கிற பெயரில்  கண்ணியமில்லாமல் கேலி, நக்கல், நையாண்டி செய்கிறார்கள். அது வேண்டாமே.

நல்லபடமாக இருந்தால் மக்கள்  பார்ப்பார்கள். உங்கள் எழுத்துகள்தான் அழைத்து வருகிறது. அதை நல்லபடியாக பயன் படுத்தலாம். ” இவ்வாறு பிரபு கூறிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறினார்.முன்னதாகப் பேசிய  விக்ரம் பிரபு ”வாகாவின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் 5 நாள் மட்டுமே பாக்கி இருக்கிறது. ‘வீரசிவாஜி’ 60 சதவிகிதம் முடிந்துள்ளது. ” என்றவர்,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தும் கூறினார்.