விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை!

ajith-vivek1ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது. கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.

விழாவில், தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நடித்த படங்களை இயக்கிய 102 வயதான மூத்த டைரக்டர் மித்ரதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருடன் ஒளிபதிவாளர் என்.கே.விஸ்வநாதன், மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், கலை இயக்குனர் தோட்டாதரணி, வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், துணை நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் கலந்து கோண்டு விவேக் பேசும்போது “டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி.” என்று தொடங்கியவர், “நான் இப்போது தலை அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறேன். அவர் என்னை பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைல் பாலோ பண்ணச் சொன்னார்.நல்ல யோசனைதான் சொன்னார்.ஆனால்  பெப்பர் எங்கேஇருக்கிறது? சால்ட்தான் இருக்கிறது ”என்று தன் நரைத்த தலையைப் பற்றிக் கூறினார். DSC_0147

அவர் மேலும் பேசும்போது ”நான் நடிக்க வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால் இப்போதுதான்  எனக்கு சிறந்த புது முக நடிகர் விருது கொடுத்துள்ளார்கள் .மகிழ்ச்சி ”என்றார்.

நெப்போலியன் பேசும்போது. “இந்த வி4 என்று பெயர் வைத்ததே நான்தான். நான்இடையில் ஐந்து ஆண்டுகள் அரசியலில் இருந்து விட்டேன். அதனால் நடிக்க வரவில்லை. இனிமேல் நடிக்க இருக்கிறேன். இந்த 2015ல் நடிப்பேன்.” என்றார்.

பிரபு பேசும்போது..” முன்பு ஒரு நடிகரின் மகனாக இருந்து சந்தோஷப்பட்டேன் இப்போது ஒரு நடிகரின் அப்பாவாகவும் இருந்து சந்தோஷப்படுகிறேன். சென்ற 2014ல் என் மகன் விக்ரம்பிரபுவுக்கு எல்லாப் படங்களையும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி  “என்றார்.

சத்யராஜ் புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர், “நான் முதலில் திரையில் தோன்றிய ‘சட்டம் என் கையில்’ படத்துக்கு என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்தார். அவரைப் போல பெரியவர்கள் பலர் இங்கு இருக்கும் விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன்.”என்றார்.