வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’

visaaranai 01இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக 72 வது வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ” மனித உரிமைகள் பற்றிய சினிமா” பிரிவில் பெருமை மிகு விருதை வென்றுள்ளது. படத்தில் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள அட்டகத்தி தினேஷ் , சமுத்திரகனி ஆகியோரும் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.
வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் விசாரணை தான்  என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆனந்தி , சரவணா சுப்பையா, கிஷோர் , முருகதாஸ் , முத்துகுமார், சந்திரன் , அஜய் கோஷல், மூனார் ரமேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- ராமலிங்கம் , படத்தொகுப்பு -கிஷோர்.டி.இ , கதை – சந்திர குமார் , இசை- ஜி.வி.பிரகாஷ் குமார் , கலை – ஜாக் , 
சண்டைப் பயிற்சி-  திலீப் சுப்ராயன், ஒலிக்கலவை பிரதாப் , போர் ப்ரேம்ஸ் உதய குமார் ,  தயாரிப்பு நிர்வாகி -எஸ்.பி.சொக்கலிங்கம் 
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ்.வினோத் .
visaaranai 04தனுஷின் வுண்டர் பார் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிராஸ் ரூட்  பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள விசாரணை திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ள லைகா நிறுவனம் இந்த த்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.