‘வேதாளம்’ விமர்சனம்

ajith-vedalam-nwதங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தா வருகிறார்அஜீத்.  அங்கு கால்டாக்சி அதிபர் சூரியிடம் வேலைக்கு சேர்கிறார். வக்கீல்  ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜீத்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜீத்தின் அப்பாவித்தனத்தைப் பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால்,  அது பொய் சாட்சி என கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசனுக்கு அஜீத் மீது கோபம்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜீத்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனைச் சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் கொள்கிறார். இதற்கு அஜீத்தும் சம்மதிக்கவே இருவருக்கும் திருமண ஏற்பாடு  நடக்கிறது.

பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜீத் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலைக் களையெடுத்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவின் தம்பிகளை அஜீத் கொலை செய்ய முயலும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.

கொலைகாரக் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார்.அஜீத்தின் வன்முறைப் பாதை பிடிக்கமல் திருமணத்தை தடுக்க  நினைக்கிறார் .அப்போது லட்சுமி மேனன் தன் தங்கையல்ல என்கிறார்அஜீத். ப்ளாஷ் பேக் விரிகிறது  மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.இடைவேளைக்குப்பின் விரிகிற கதையில் அஜீத் யார் ,லட்சுமி மேனன் யார் என்பதே மீதிக்கதை
அஜீத் கொல்கத்தா போய் இறங்குவதில் தொடங்குகிறது படம். மொட்டை ராஜேந்திரனுடன் கலகலப்புடன் தொடங்குகிறது சூரி அறிமுகம் அவர் மனைவிக்கு பயந்தவராக செய்பவை எல்லாம் மிகை ஆனாலும் நகை ரகம். முற்பாதிப்படம் இப்படி கலகலப்பாக விரைவில் நகர்கிறது. மறுபாதியில் ப்ளாஷ் பேக்  என்று வரும் காட்சியில் செண்டிமெண்ட் அதிகம், வேகமும் தடை படுகிறது.

அஜீத் வீராவேசமான சண்டைக்காட்சிகளில் பளிச்சிடுகிறார். அண்ணன் தங்கை பாசக்காட்சிகளில் நெகிழ வைக்கிறார். ,ப்ளாஷ் பேக்கில் வேதாளமாக வரும்போது காசேதான் கடவுளடா என்ற கொள்கையுடன் ரவுடியாக வருவதும் கூட பரபர ரகம்தான் .பாடல் காட்சிகள் ரசிகர்களுக்கான மாஸ் விருந்து..

லட்சுமிமேனன் படம் முழுக்க வந்து தங்கையாக வந்து  மனதில் தங்குகிறார். ஸ்ருதிஹாசன் வழக்கம் போல கறிவேப்பிலை நாயகியாக வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங் இருவரும் வழக்கமான சவுண்ட் வில்லன்கள். வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள்.கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம். கண் தெரியாமல் நடித்திருக்கும்  பல இடங்களில் வெளிப்படும் அஜீத்தின் இயல்பு மீறிய பாத்திரப்படைப்பு  மிகை பிம்பம்,காட்சிகளை  அனைவராலும் ஏற்க முடியாது. அஜீத் ரசிகர்கள் மட்டுமே இதுமாதிரி மிகைக் காட்சிகளை ரசிப்பார்கள். ஆனால் தம்பிராமையா, சுதா  வரும் ஓவர் டோஸ் செண்டிமெண்ட் காட்சிகளில் அஜீத் ரசிகர்களே நெளிவார்கள்.

அஜீத் ஏற்கெனவே ‘காதல்கோட்டை’ ‘வாலி’ போன்ற நல்லகதையம்சம் கொண்ட இயல்பான படங்களில் நடித்திருப்பவர். அஜீத் இப்படி ஒரு நாடகத்தனமான கதையில் நடிக்கத் துணிந்தது எப்படி?

தமிழ்ச்சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இது மாதிரி மிகைப் படுத்தப்பட்ட படங்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறாரே இயக்குநர் சிவா.இதுமாதிரி முழுநீள தெலுங்குப் படம் எடுக்கும் இயக்குநர்களிடமிருந்து அஜீத்தை யார் காப்பாற்றுவது?

இப்படிப்பட்ட மசாலா கதையை பாதுகாப்பு என்று அஜீத் கருதுகிறாரா? அப்படிக் கருதினால் அது ஆபத்தானது. வெறும் ரசிகர்களை மட்டுமே நம்பினால்  ரசிக பலமுள்ள ரஜினியின் எல்லாப்படங்களுமே வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. அஜீத் இனியாவது எல்லாருக்குமான படத்தை தருவாரா?.