வேறு மாதிரியான உணர்வைத் தரும் பேய்ப்படம் ‘சவுகார்பேட்டை’

srekantமாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும்   படம் “ சவுகார்பேட்டை “

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில்  “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு வருகிறது.

மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா,  விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா,  பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்                    –          துரை.P.G     இசை-  ஜான்பீட்டர்

ஒளிப்பதிவு                –           சீனிவாசரெட்டி, தயாரிப்பு   –  ஜான்மேக்ஸ்  –   ஜோன்ஸ்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.  படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்…” இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்திக் காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும்” என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை.