சிங்கப்பூர் MDIS கல்வி நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் கல்விக் குழுமத்தின் உலகமயமாக்கும் முயற்சி!

vels1

வேல்ஸ் கல்விக்குழுமம், அதன் தன்னிகரற்ற தலைவர் முனைவர் ஐசரி. கே. கணேஷ் அவர்களால் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. மறைந்த பழம்பெரும் நடிகரும், துணை அமைச்சருமான மாண்புமிகு ஐசரி. வேலன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகவும், வேல்ஸ் கல்வி அறக்கட்டளையைத் தன் தந்தையின் பெயரில் முனைவர் ஐசரி. கே. கணேஷ் அவர்கள் தொடங்கினார்.

1992-ல் சிறிய அளவில் தொடங்கப்பெற்ற வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று, 15 கல்வி நிறுவனங்களுடனும் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் மலைக்கவைக்கும் வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் தன்னிகரற்றக் கல்விப்பணியின் காரணமாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்னும் உயரிய நிலையை அடைந்துள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழகம் இன்று, 13 கல்விப் புலங்களையும், 38 துறைகளையும், 100-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளையும் கொண்டு விளங்குகின்றது. மழலையர் கல்வி முதல் மதிநிறை முனைவர் பட்டம் வரை அனைத்தும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல், பல்மருத்துவவியல், மருந்தியல், கலை மற்றும் அறிவியல், உணவக மேலாண்மையியல், கப்பல்சார் கல்வியியல், மேலாண்மைக் கல்வியியல், சட்டக் கல்வியியல் மற்றும் மருத்துவம்(தெலுங்கானா வளாகம்) ஆகிய பணி வாய்ப்பை அள்ளித்தரும் முன்னணிப் பாடப்பிரிவுகள் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.vels1mdis

வேல்ஸ் கல்விக் குழுமம் உலகத் தரம்வாய்ந்த கல்வியை வழங்கும்பொருட்டு சிங்கப்பூரில் உள்ள MDISஎன்னும் கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், கல்வியை உலகமயப்படுத்தும் முயற்சி மேற்கொள்கொள்ளபட்டுள்ளது. அதாவது, உலகத்தரம் வாய்ந்த கல்வியை இங்கு கொண்டுவருவதற்கும், நம் கல்விமுறையை உலகறியச் செய்வதற்குமான கூட்டாளுமையை ஏற்படுத்தியுள்ளது. இவையனைத்தும் வேல்ஸ் என்னும் ஒரே குடையின்கீழ்ச் செயல்படுகிறது.

MDIS பற்றி

MDIS என்பது சிங்கப்பூரில் உள்ள தொலைநோக்குக் கல்வியை அளித்துவரும், இலாப நோக்கமற்ற மேலாண்மை மேம்பாட்டுக் கல்வி நிறுவனமாகும். இந்நிறுவனம் 1956-ல் தோற்றுவிக்கப்பட்டது. இது இரண்டு முதன்மைத் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில், சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு தனியார் கல்வி நிறுவனம் என்பது சிங்கப்பூர் கல்விசார்ந்த செயல்திட்டங்களுடன் அமைந்துள்ளது. MDIS Internationalதனியார் நிறுவனம் என்பது உலகமயமாதல் என்னும் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு முறைகளைக் கொண்டுள்ளது.

MDISநற்சான்றுபெற்ற தொழில் மற்றும் மேலாண்மைப் பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு கற்பவரின் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கத்துடனும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் முனைப்புடனும் கூடிய பாடங்களை ஆஸ்ரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

2008 செப்டம்பர் மாதத்தில், தன் முதல் வெளிநாட்டுக் கல்விவளாகத்தை MDIS கல்வி நிறுவனம்,மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பகிஸ்தானின் தலைநகரான தஸ்கண்டில் தொடங்கியது. இது மத்திய ஆசிய மண்டலத்தில் உலகத்தரம் வாய்ந்த கல்விச் சேவையை வழங்கிவருகிறது. மேலும், ஒரு மைல்கல்லாக, மலேசியாவின் இஸ்கந்தரில் உள்ள ஜோகர் என்னுமிடத்தில் “கல்விநகர்” MDIS-ஆல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் உயர்கல்வி நிறுவனமொன்று மலேசியாவில் இடம்பெற்றது இதுவே முதல் முறையாகும்.

கூட்டுப்பங்காண்மை பற்றி

வேல்ஸ் கல்வி நிறுவனமானது, MDIS நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 22ஜூலை 2015-ஆம் நாளன்று செய்துகொள்ளப்பட்டது. அதனடிப்படையில்,MDIS-VELS தனியார் கல்வி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

இதன்மூலம் MDIS கல்வி நிறுவனத்தால் நடத்தப்பெறும் புகழ்பெற்ற பாடப்பிரிவுகளை இந்திய மாணவர்கள் இங்கிருந்தே கற்பதற்கு நல்லதொரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பாடப் பிரிவுகள் பின்வருமாறு:

Masters

 

Master of Business Administration

 

Degree

 

Bachelor of Arts (Hons.) Business and Marketing

 

Bachelor of Arts (Hons.) Accounting and Financial Management

 

Bachelor of Science (Hon.s) in Business Studies and Finance

 

Bachelor of Science (Hons.) in Banking and Finance

 

Advanced Diploma

Advanced Diploma in Business Management

– awarded by MDIS – VELS Education Private Limited

 

Advanced Diploma in Business Administration ( International Business)

– awarded by MDIS – VELS Education Private Limited

 

Diploma- awarded by MDIS – VELS Education Private Limited

 

Diploma in Business Management

Diploma in Marketing

Diploma in Accounting