ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் !

prabuseva1வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் .

அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கணும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….இதைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும்                            “ எங் மங் சங் “  படத்தையும் தயாரிக்கிறார்கள். ‘தேவி’ வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.

மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா),  கும்கி அஸ்வின்,  நாகேந்திரபிரசாத், முனீஸ்காந்த், காளி வெங்கட், மாரிமுத்து  ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   ஆர்.பி.குருதேவ்  ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை    –  அம்ரீஷ்

பாடல்கள்   –  பிரபுதேவா, மு.ரவிகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   எம்.எஸ்.அர்ஜுன்.

நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராக கொடி கட்டியவர். அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குந ராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.laxmimenon

டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா, ஸ்டன்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை  பயிற்சியாளராக நடிக்கும் படம் “ எங் மங் சங் “  முழுக்க முழுக்க காமெடி கலக்கல் படமான “ எங் மங் சங் “  படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.