10 வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு!

நோர்வேயில் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்களுக்கான சிறந்த திறமைசாலிகள்  தேர்வு செய்யப்பட்டு “தமிழர் விருதுகள்” வழங்கப்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதே மொழித் திரைப்படங்களுக்கான திரையிடலும், போட்டிகளும் நடைபெற்று தமிழர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 
 
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் இந்த  ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது.  தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான  முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள்  வழங்கப்படவிருக்கின்றன
 
10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு:
சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து எமது நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறிய தருகின்றோம்.
 
அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்சித்  தயாரித்த, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான ‘பரியேறும் பெருமாள்” திரைப்படம் அதி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போல எமது நடுவர்களால்  சிறந்த இயக்குநராக “மேற்கு தொடர்ச்சி மலை” இயக்குனர் லெனின் பாரதியும், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக திரிஷா கிருஷ்ணன் அவர்களும்  96 திரைப்படத்தில் நடித்தமைக்காக தமிழர் விருதினை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெளியான திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான ஏனைய திரைப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ‘கனா’ திரைப்படத்தை தயாரித்தமைக்காகவும், சிறந்த இசையமைப்பாளராக  ‘பரியேறும் பெருமாள்’, ‘வட  சென்னை ’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த  சந்தோஷ் நாராயணனும் தேர்வாகியிருக்கின்றனர்.

மேலும் சிறந்த பாடகிக்கான விருது ‘96’ படத்தில் காதலே காதலே  என்ற பாடலை பாடியதற்காக சின்மயீ ஸ்ரீபடா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தானா சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சொடக்கு மேல, அடி வெள்ளக்கார  என்ற பாடலைகளைப் பாடிய  அந்தோணி தாசனுக்கு வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர், நடிகர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலைச்சிகரம் விருது நடிகர், நகைச்சுவையாளர் விவேக் அவர்களுக்கு சமூக அக்கறையுடன் உழைப்பவர் என்ற காரணத்திற்காக வழங்கப்படுகின்றது.

தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச்  சொல்லிகலைபண்பாடுவரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள்  
கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கிநெருக்கியதொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்ந்து வளர்த்து வருகின்றதுநோர்வேயிய அரசின்ஒஸ்லோலோரன்ஸ்கூநகரசபைகளின் மிகப் பெரிய அங்கீகாரத்தினை பெற்று சிறப்பானவிழாவாக உருவெடுத்துள்ளது
 
இத்தனை வருடங்களாக எமக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பத்திரிக்கைகள், இணைத்தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள்  மற்றும் மக்கள் தொடர்பாளர்கள், அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் எமக்கான ஆதரவினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணம் தொடர்கின்றது.
 
இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஒசுலோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது. தமிழர் விருதினை நோர்வே நாட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள உள்ள கலைஞர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும் 
 
ஏனைய பிரிவுகளில் தமிழர் விருது பெற்றவர்களின் விவரங்கள் கீழே தருகின்றோம்.
மின்னஞ்சல் : tamilfilmfestival@gmail.com 
 
10 வது நோர்வே தமிழ்த்  திரைப்பட விழா 2019 குழுவினால் 
தெரிவான  20 திரைப்படங்கள்:  
 
01.பெரியேறும் பெருமாள்- மாரி செல்வராஜ் 
02.மேற்கு தொடர்ச்சி மலை -லெனின் பாரதி 
03.கனா – அருண் ராஜா காமராஜ் 
04. 96 – பிரேம்குமார்
05.கடைக்குட்டி சிங்கம் – பாண்டிராஜ்
06.வட சென்னை – வெற்றிமாறன் 
07.இரும்புத்திரை – பி.எஸ்.மித்திரன் 
08.காற்றின் மொழி – ராதாமோகன் 
09.நடிகையர் திலகம் – நாக் அஸ்வின் 
10.காலா – பா.ரஞ்சித் 
11.லட்சுமி – ஏ.எல்.விஜய் 
12.சீதக்காதி பாலாஜி தரணிதரன் 
13.ஒரு குப்பைக் கதை – காளி ரங்கசாமி 
14.கோலமாவு கோகிலா -நெல்சன் 
15.அடங்க மறு -கார்த்திக் தங்கவேல் 
16. ராட்சசன் – ராம்குமார் 
17. இமைக்கா நொடிகள் – ஆர்.அஜய் ஞானமுத்து 
18.டிக்.டிக் – சக்தி சவுந்தர் ராஜன் 
19.பியார் பிரேமா காதல் – இளன்
20. அண்ணனுக்கு ஜே

———————————————————————————————-

Press Release 2
Norway Tamil Film Festival -Tamilar Awards 2019. [25th-28th April]
Tuesday, 08th Janaury 20179 Oslo.

NTFF Board members, Festival Director Mr. Vaseeharan Sivalingam and NTFF Jury Chief Mrs.Gloriana Selvanathan(from Berlin, Germany) announced the WINNERS of Tamilar Awards 2019 for Feature films from Tamilnaadu  at the Stovner, Oslo City in Norway.


NTFF had entered every nook and corner of the world in the past years and now entering gloriously into its 10th year. The popularity is seen by the number of entries we had and requests are still coming continuously for other categories. This proves how people respect the awards given by NTFF and regard it as prestigious awards. By popular demand by the filmmakers of foreign language, we have included the foreign language film category from last year.

The recognition of the festival by massive audiences is based on the unbiased decisions and the efficiency of the festival team together with the glamour of the festival. We are thankful for all the filmmakers, artistes and the audience who believe and continue to support us. The festival is for you and we only find the talents known and the hidden talents and bring them publicly for international recognition.

If you are one of the Tamilar Awards Winner or Nominee and would like to participate in Award Night please write email to Festival Director Mr.Vaseeharan tamilfilmfestival@gmail.com for more Information about Visa and Travel Procedures to Norway.

It is necessary and important that the Award winners should personally come to receive the Award. 

Pin It

Comments are closed.