100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘க்கு சுந்தர்.சியின் பாராட்டு!

sundar-c-st100க்கு 100 மார்க் தரலாம் என்று ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தை இயக்குநர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார்.

அவர் பேசும்போது,  ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம்.
புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக
வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. 364x480படம்
ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் அற்புதம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும்.
இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்” என்றார்.